மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில்
கடைசித் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை
மறுவாய்ப்பு வழங்கியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது, கடந்த மார்ச் 24-ந் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வை எழுத வாய்ப்பில்லாமல் போனவர்களுக்கு மட்டும் ஜூலை 4-ம் தேதி மறு தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
அதாவது, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் 4-ம் தேதி வேதியியல் / கணக்குப் பதிவியல் / புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும், 12ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத முடியாமல் போன 36,842 மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி மே 27-ம் தேதி தொடங்கும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 10ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடத்தப்படும்.
மேலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட வேதியியல் / கணக்குப் பதிவியல் / புவியியல் பாடங்களுக்கு ஜூன் 2ம் தேதி தேர்வு நடைபெறும்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். தனிநபர் இடைவெளியுடன் மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...