Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆங்கிலம் வாசிக்கக் கற்றுத் தருவதில் , Basic Syllable Chart எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது?


தமிழ் மொழியை பொறுத்த வரை, எழுத்துக்களின் உச்சரிப்பு ஒலியை நன்கு அறிந்தால், முதலில் எழுத்துக் கூட்டி வாசிக்கலாம்.

இதில் தொடர் பயிற்சி எடுக்க எடுக்க, காலப்போக்கில் எழுத்து கூட்டாமல் விரைவாக வாசிக்கலாம்.

ஆனால் ஆங்கிலம் அப்படி அல்ல.

ஆங்கில எழுத்துக்களின் பெயர் உச்சரிப்பு ஒலி வேறு. அதே எழுத்துக்கள் வார்த்தைகளில் வரும் போது, அதன் உச்சரிப்பு ஒலி வேறு.

சில எழுத்துக்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட உச்சரிப்பு ஒலி உண்டு.

சில இடங்களில், சில எழுத்துக்கள் உச்சரிப்பே இல்லாமல் Silent ஆக இருப்பதுண்டு.

சில எழுத்துக்கள் சேர்ந்து வரும் போது, அவற்றின் உச்சரிப்பு ஒலியும் மாறும்.

இவற்றை ஆங்கிலத்தில் Spelling Rules என வகைப் படுத்தி இருக்கிறார்கள்.

100 க்கும் மேற்பட்ட Spelling Rules இருந்தாலும், அவற்றில் முக்கிய இரண்டு Spelling Rules ஐ, மாணவர்கள் மனதில் நன்கு ஆழமாக பதிய வைக்க வேண்டும்.

1. ஆங்கிலத்தை பொறுத்த வரை, Vowels இல்லாமல் எந்தவொரு வார்த்தையோ அல்லது எந்தவொரு Syllableலோ  அமையாது.

2. ஒரு வார்த்தை அல்லது ஒரு Syllable ல், ஒன்றுக்கு மேற்பட்ட vowels வந்தால், வார்த்தையின் முதல் vowel ன் ஒலி பிரதானமாக ஒலிக்கும். இதன் பின்னர் வரக் கூடிய vowels எல்லாம் silent ஆக இருக்கும்.

எ. கா.
bit, bite.

bit வார்த்தையில் i என்பது 'இ' ஓசையிலும், bite வார்த்தையில் i என்பது 'ஐ' ஓசையிலும் ஒலிக்கிறது.

*Basic Syllable Chart ன் முக்கியத்துவம்:*

Chart 1. Consonant உடன் vowel சேரும் போது ஒலி உண்டாகும் விதம்.

Chart 2. Vowel உடன் Consonant சேரும் போது ஒலி உண்டாகும் விதம்.

மேற்கூறிய இரண்டு Chart லிலும், நன்கு ஒலிக்குமளவு மாணவர்களை தயார் செய்து விட்டால், ஆங்கிலம் வாசிப்பது மிக எளிது.

ஏனென்றால், இந்த Basic Syllable Chart அட்டவணையின் முன்பாகவோ அல்லது பின்பாகவோ எழுத்துக்கள் சேர்ந்து வார்த்தைகள் அமையும்.

எ. கா.

at (Basic Syllable Chart ல் உள்ளது)

bat, cat, fat, hat, mat, pat, rat, sat என நிறைய வார்த்தைகள் வரும்.

ஆங்கில வார்த்தைகளை எத்தனை Syllable ஆக வகைப் படுத்தலாம்?

1. Mono Syllable (man)

2. Bi - Syllable
(bi - cycle)

3. Tri - Syllable
( but - ter - fly )

4. Poly Syllable ( பல்வகை Syllable)
in - de - pen - dent

ஆங்கிலத்தில் 4 syllables க்கு மேல் வார்த்தைகள் இல்லை.

சில வார்த்தைகளில் 5 அல்லது 6 syllables இருக்கக் கூடும்.

 அப்படி இருந்தால், மூல வார்த்தையின் முன்பாகவோ அல்லது பின்பாகவோ,  (prefix or suffix) ஆகத்தான் வரும்.

சில ஆங்கில வார்த்தைகளை பார்க்கும் போது மிகப் பெரிதாக இருக்கும்.

ஆனால் syllables ஆக பிரித்து உச்சரிக்கும் போது, மிக எளிதாக வாசிக்க முடியும்.

எ. கா.

Noncooperation

 வார்த்தையை பார்க்கும் போது பெரியதாக இருக்கும்.

இதை syllables ஆக பிரிக்கும் போது,

Non - co - op - er - a - tion

என எளிதாக பிரித்து உச்சரிக்கலாம்.

tion சேர்ந்து வந்தாலே அதன் உச்சரிப்பு ஒலி shun என்பதாகும்.

Basic Syllable Chart ல் பயிற்சி அளிக்கும் போது, முதல் chart ல், bi, ci, ... thi வரிசையில், இரண்டு விதமான ஒலிகள் வருமாறு பயிற்சி அளிக்க வேண்டும்.

முதல் வகை ஒலி (bi, ci... thi ... வரிசையில் - 'இ' உச்சரிப்பில் ஒலிக்க வேண்டும்)

அதாவது be, ce, ... the வரிசையில் உள்ள ஒலிகளையே இதற்கும் உச்சரிக்க வேண்டும்.

ஏனென்றால் bi + t  = bit என வரும்.

இரண்டாம் வகை ஒலி ( bi - by, ci - cy, di - dy என 'ஐ' ஒலியில் உச்சரிக்க கற்றுத் தர வேண்டும்.

ஏனென்றால் i + e அமைப்பில் வார்த்தைகள் அமையும் போதோ, சில எழுத்துக்களின் கலவையுடன் வரும் போதோ, இதே வரிசை உச்சரிப்பு 'ஐ' உச்சரிப்பில் வரும்.

எடுத்துக் காட்டு:
bite, cite, dive, five, hive, kite, lite, light, (light ல் gh Silent), might, night, pilot, right, site, sight, tight என பலவற்றை உதாரணமாக சொல்லலாம்.

Basic Syllable Chart ல் நன்கு பயிற்சி அளித்த பின், அடிக்கோடிட்ட வரிசையில்  எளிதாக வாசிக்க கற்றுத் தரலாம்.
நன்றி!

Thanks to
Mr.Lawrence,
Trichy




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive