கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ஊரடங்கு மூன்று கட்டங்களாக தொடர்ந்த நிலையில் மே 17 உடன் முடிவடைகிறது. மே 17 க்கு பிறகு ஊரடங்கு நான்காவது கட்டமாக நீட்டிக்கப்படும் என்றும் ஆனால் அது இதற்கு முன்னால் அமலில் இருந்த ஊரடங்கை விட மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் பேசியுள்ளார். இந்நிலையில் கல்லூரி கல்வி இயக்ககம் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கல்லூரி மேம்பாட்டு பணிகளுக்கான நிதியை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை மற்றும் மதியம் என்று இரு விதமான பட வேளைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. காலை வேளை வகுப்பு காலை 7.30 மணிக்கும் மதிய வேளை மதியம் 12.30 மணிக்கும் தொடங்குகின்றன. நடைமுறைலிருக்கும் இரு பாட வேளைகள் ரத்து செய்யப்பட்டு ஏற்கனவே 2006 ஆண்டுக்கு முன்பிருந்த ஒரே பாடவேளை அமல்படுத்தப்படுகிறது , என கல்லூரி இயக்ககம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்காக அரசிடம் கூடுதல் நிதி கோரப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகு இத்தகைய நடைமுறை அமலுக்கு வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...