NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இணையத் திரை: பொழுதைப் பொன்னாக்கும் ஆவணப்படங்கள்


ஊரடங்கு காலத்தில் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான புதிய ரசிகர்கள் பெரும் அலையெனச் சேர்ந்து வருகிறார்கள். ஆனபோதும், ‘பொழுதுபோக்குக்கு அப்பால் இவற்றால் பயனுண்டா?’ எனும் பொதுவான புகாரும் இணையத்திரை மீது எதிரொலிக்கிறது. அதற்கான பதிலாக, தீவிரமான ஆவணப்படங்கள் அங்கே குவிந்திருப்பதைச் சொல்லலாம்.
தற்போதைய நெருக்கடியான காலகட்டம் என்பது, ஆழமான கருத்துகளை அதிகம் அறிவதற்கும், குறுக்கு விசாரணை செய்வதற்குமான மன நிலையைக் கொடையாகத் தந்துள்ளது. எனவே, ஆர்வமும் தேடலும் உடையவர்கள் தமது ரசனைக்கேற்ற ஆவணப்படங்கள், அறிவைக் கொட்டித்தரும் ஆவணத் தொடர்கள் போன்றவற்றைப் பார்த்து மகிழலாம். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்றவற்றின் பிரம்மாண்ட ஆவணப் படங்களுக்குப் போட்டியாக, Docubay போன்ற பிரத்யேகமான தளங்களும் ஆவணங்களுக்கு என்றே அண்மையில் களமிறங்கி உள்ளன.
ரசனைகள் பலவிதம்
பெருந்தொற்றின் வீரியம் நமது வாழ்க்கையில் எது அவசியம் என்பதைப் பாடமாகப் புகட்டி வருகிறது. அந்தப் பாடங்களுக்கு நெட்ஃபிளிக்ஸின் ‘Minimalism: A Documentary about the Important Things’ என்ற ஆவணப் படம் உதவலாம்.
வூஹானின் வைரஸ் உட்பட சீனாவின் இரும்புத்திரைக்குள் நீடிக்கும் குழப்பங்கள் ஏராளம். கடந்த வருடங்களில் அப்படி முடிவுக்கு வந்த சீன முன்னெடுப்புகளில் ஒன்று ‘ஒற்றைக் குழந்தைக் கொள்கை’. அது குறித்தான விருது பெற்ற ‘One Child Nation’ ஆவணப் படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
வீடுகளில் தனித்திருக்கும் காலத்திலும் நம்மை நெருக்கமாக உணரச் செய்கிறது இணையம். ஆனபோதும் அதன் பலன்கள் எல்லோரையும் சென்றடைந்திருக்கிறதா, கட்டணத்துக்கு உகந்த சேவை கிடைக்கிறதா போன்ற பல கேள்விகள் மிச்சமிருக்கின்றன. அவற்றுக்கு விடை தேடுகிறது ஹாட்ஸ்டாரின் ‘The Internet must Go’ ஆவணப்படம்.

ஒரு தொழிற்சாலையை மையப்படுத்தி அமெரிக்க - சீன பேதங்களை அலசிய ஆவணப்படம் ‘American Factory’. ஒபாமா தம்பதியர் தயாரித்து, அண்மையில் சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது வென்ற இதை நெட்ஃபிளிக்ஸில் காணலாம்.
ஈரானில் தனது வித்தியாசமான சினிமா மற்றும் குறும்படங்களுக்காக வீட்டுச் சிறையில் அடைபட்டிருப்பவர் இயக்குநர் ஜாபர் பனஹி (Jafar Panahi). செல்போன் உதவியால் தனது சிறை அனுபவத்தை இவர் படமெடுத்து, அதன் டிஜிட்டல் பிரதியைப் பிறந்தநாள் கேக் ஒன்றில் மறைத்து கான் திரை விழாவுக்கு அனுப்பிவைத்தார். ‘This is not a film’ என்ற இந்த ஆவணப்படம் ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.
இவை தவிர்த்து வயிற்றுடன் மூளையையும் பதம் பார்க்கும் ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ நிகழ்ச்சிகள், ‘ஹார்மனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ (அமேசான்) போன்ற இசைப் பின்னணியிலான ஆவணத் தொகுப்புகளையும் தேடி ரசிக்கலாம்.

இயற்கை போற்றுதும்
இந்தப் பூமி மனிதனுக்கு மட்டுமானதல்ல; ‘கோவிட்-19’ உட்பட அனைவருக்குமானது என்பதை வைரஸுக்கு எதிரான தற்போதைய
போராட்டம் உணர வைத்திருக்கிறது. இயற்கையை மேலும் விரிவாக உள்வாங்குவதற்குக் கடந்த வருடம் வெளியான எம்மி விருது பெற்ற ‘Our Planet’ என்ற நெட்பிளிக்ஸ் வலைத்தொடரில் தொடங்கலாம். இந்த வரிசையில் டேவிட் அட்டன்போரோவின் பின்னணிக் குரலுடனான ‘The Blue Planet, Planet Earth’ ஆவணத்தொடர் வரிசைகளை அமேசான் வழங்குகிறது.
இந்த வரிசையில் நெட்பிளிக்ஸின் ‘Chasing Coral’, ‘Chasing Ice’ போன்றவையும் சேரும். உலகம் ஒரு குப்பைத் தொட்டியாவதை ‘A Plastic Ocean’, ‘Blue Mission’ போன்றவை உணர்த்தும். ‘பிபிசி எர்த்’ கட்டண அலைவரிசையின் ஆவணப்படங்களைக் கட்டணமின்றித் தமிழில் ரசிக்க ‘சோனிலிவ்’ செயலி உதவுகிறது.
விறுவிறு ஆவணங்கள்
புனைவிலான திரில்லர்களைவிட அப்பட்டமான நிஜங்களைத் தோலுரிக்கும் ஆவண திரில்லர்கள் சுவாரசியமானவை. முகநூல் பயனர்களின் தரவுகள் நுகர்பொருளானதை நெட்பிளிக்ஸின் ‘The Great Hack’ விறுவிறுப்புடன் சொல்கிறது. அரச பயங்கரவாதத்தில் தொடங்கி, கார்ப்பரேட் கொள்ளைகள் வரை சகலத்தையும் அம்பலப்படுத்திய ‘விசிலூதி’களை மையமாகக் கொண்ட ஆவணப் பதிவுகள் இந்த வரிசையில் சேரும்.
தங்கள் உயிரைத் துச்சமாக்கிப் போர்முனையில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களின் அனுபவங்களை உரசும் ‘Dying to Tell’, பல்வேறு நாடுகளின் போர்முனைகளில் பாலியலுக்கு இரையாகும் பெண்கள் குறித்த ‘War against Women’, குண்டு மழையின் மத்தியில் சிரியாவில் மீட்புப் பணியில் அல்லாடுபவர்கள் பற்றிய ‘The White Helmet’, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே குறித்த ‘Risk’ உள்ளிட்ட ஆவணப் பதிவுகள் நெட்பிளிக்ஸில் கிடைக்கின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற உலகளாவிய தீவிரவாத இயக்கங்கள், வல்லரசு உளவு நிறுவனங்களின் வில்லத்தனங்கள் உள்ளிட்டவற்றை அமேசான் பிரைம் வீடியோ பல்வேறு தலைப்புகளில் வைத்துள்ளது.

நாவூறச் செய்யும் உணவுகள்
வீடடங்கில் டல்கோனா காபிக்கு அடுத்ததாகச் சமூக ஊடகங்கள் அதிகம் சிலாகித்த உணவுகளில் முக்கியமானது ஜப்பானியத் தயாரிப்பான சூஷி. ஜப்பானிலிருந்தே அதன் பிரசித்தியின் பின்னணியைப் பேசுகிறது ‘Jiro Dreams of Sushi’ ஆவணப்படம். உலகப்புகழ் தலைமைச் சமையல் நிபுணர்கள் பங்கேற்கும் ‘Chef’s Table, The chef show’, ‘Salt Fat Acid Heat’, ‘Breakfast’, ‘Lunch




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive