Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் விடைத்தாள் முகாம்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி , மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் 12 ஆம் வகுப்பு விடைத்தாட்கள் திருத்தும் முகாம் 27.5.20 முதல் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.
IMG_20200521_230114

அரசாணையில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

In order to ensure ocial distancing in evaluation centres , each evaluation room shall have only 8 persons including one Chief Examiner , one officer for scrutiny and six Assistant Examiners. Accordingly , additional numbers of Evaluation centres shall be setup for this purpose.

• Provision of handwash facilities with soap and running water / hand sanitizers for disinfection of hands shall be made adequately as a precautiopary measung

இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் முகாம் பணிக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கொரானோ வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை மேற்கொண்டு , சுகாதாரமாக இருக்கவும் , சமுக இடைவெளி கடைபிடித்து அவ்வப்போது தங்கள் கைகளை உரிய கிருமி நாசினி / சோப்பு கொண்டு தூய்மைப்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஊரடங்கு காரணமாக நீண்ட நாட்களாக வகுப்பறைகள் உபயோகப்படுத்தப்படாமல் உள்ளது. எனவே தலைமையாசிரியர்கள் வேலையாட்களை கொண்டு விடைத்தாட்கள் திருத்தும் முகாம் பணிக்கு உபயோகப்படுத்தும் அனைத்து மேசை , நாற்காலிகள் மற்றும் அறைகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

12 ஆம் வகுப்பு விடைத்தாட்கள் திருத்தும் முகாம் 27.5.20 முதல் தொடங்க உள்ளதால் , ஆட்சியர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி ஆசிரியர்களின் பாதுகாப்பு கருதி தேர்வுகள் நடைபெறும் பள்ளிகளில் நகராட்சி / மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு தேர்வு அறைகள் மற்றும் பள்ளி கட்டடங்களில் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்திடவும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிட அனைத்து முதன் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 ஆசிரியர்கள் முகாம் பள்ளிக்கு நுழையும் போதும் வெளியே செல்லும் போதும் கைகளை சோப்பினால் தண்ணீர் கொண்டு கழுவவும் மற்றும் கிருமி நாசினிகள் / Hand Sanitizers மூலம் சுத்தம் செய்துகொள்ளவும் , அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து கொள்ளவும் , சமுகு இடைவெளியினை மேற்கொள்ளவும் முகாம் அலுவலர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கிருமி நாசினியான லைசால் ( Lysol ) , பினாய்ல் ( Phenol ) மற்றும் பிலிச்சிங் ( Bleaching Power ) கொண்டு பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து கட்டடங்களும் மற்றும் அனைத்து அறைகளும் காலை மற்றும் மாலையில் சுத்தம் செய்ய வேண்டும் . பள்ளிக்கு வரும் வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் . விடைத்தாட்கள் திருத்தும் இரண்டு அறைகளுக்கு ஒரு பொதுவான இடத்தில் Hand Sanitizer வைக்கப்பட வேண் மேலும் , இது Wanted குறித்து அறிக்கையினை பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் மின்னஞ்சல் அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

     - பள்ளிக்கல்வி இயக்குநர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive