Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு: பாட அளவைக் குறைக்கத் திட்டம் -முதல் பருவ பாடத்தை கைவிடுவது என தகவல்?

கொரோனா தொற்று தீவிரத்தின் காரணமாக வழக்கமாக ஜூனில் திறக்கப்படும் பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காலதாமதத்தின் காரணமாக வழக்கமாக பாடங்களை நடத்தி முடித்து உரிய காலத்தில் தேர்வுகள் வைக்கும் நடைமுறை வரும் கல்வியாண்டில் சவாலானதாக இருக்கும்.

இத்தகைய சூழலில் தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரை கடைபிடிக்கப்பட்டு வரும் முப்பருவ முறையில் மாற்றம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. அதன்படி 1 முதல் 8ம் வகுப்பு வரை நடைமுறையில் உள்ள முப்பருவ பாடமுறையில் 1 பருவ பாடத்தை கைவிடுவது என பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோன்று வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களின் எண்ணிக்கை அதிகம். ஏற்கனவே புதிய பாடத்திட்ட அடிப்படையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடச் சுமை அதிகமாக இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர் குறைக்கவும் கோரிக்கை வைக்கின்றனர்.இந்த சூழலில் குறுகிய நாட்களுக்குள் பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டி உள்ளதால் முழுமையாக பாடங்களை நடத்தி முடிப்பது பெரும் சிரமம். இந்த நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சில பாடங்களை குறைக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா தாக்கத்தால் தற்போது பள்ளிகள் திறப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஏற்ப்பட்டுள்ள காலதாமதத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




1 Comments:

  1. ஒரு வருடத்திற்கு பெரியவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தும்போது பள்ளிக்குழந்தைகளிடம் அஞ்சல் வழி கல்விமுறையினை விஜயதசமிவரை அளிக்கலாம். அதன்பிறகு நிலைமை சரியானால் முழுநேரமும் வகுப்புகளை நடத்தலாம். புத்தகம் நன்றாக இருக்கும்போது விட்டுவிட்டு நடத்தினால் எதிர்காலத்தில் பிரச்னைகளைக் குழந்தைகள் எதிர்கொள்ள முடியாது.தேவைப்படும் இடங்களில் பள்ளிகள் உதவி செய்யலாம். வொர்க்புக் ஐந்தாம்வகுப்புவரை புத்தகங்களுடன் பள்ளி அஞ்சல்வழியில் நடத்தலாம்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive