பல்கலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய நகரங்களில், கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு எனப்படும், பி.வி.எஸ்சி., - ஏ.ஹெச்., பட்ட படிப்புகள்; உணவு கோழியின மற்றும் பால்வள தொழில்நுட்பத்தில், பி.டெக்., படிப்புகள் உள்ளன.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 2020 -21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், வரும், 24ம் தேதி காலை, 10:00 மணி முதல், www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், இணையதளம் வாயிலாகவே, செப்., 28 மாலை, 6:00 மணிக்குள் பதிவேற்ற வேண்டும்.அயல்நாடுவாழ் இந்தியர், அயல்நாடுவாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாடு இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டின மாணவர்களும், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அக்., 23 மாலை, 6:00 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். பிற வடிவ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.தகவல் தொகுப்பேடு, சேர்க்கை தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விபரங்கள் இணையதளத்தில் உள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...