கலை, அறிவியல் படிப்பு மீதான ஆர்வத்தால் தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இருக்கும் 92 ஆயிரம் இடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த கல்லுாரிகளில் சேர ஜூலை 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டது. இறுதிநாளான ஜூலை 31 வரை 3 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்கள் பதிவேற்ற ஆக.,5 கடைசி நாளாக இருந்த நிலையில் எதிர்பார்த்ததை விட அதிகமானோர் விண்ணப்பித்ததால் சர்வர் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் ஆக.,10 வரை சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.விண்ணப்பங்கள் ஆக.15க்குள் சரிபார்ப்பு செய்து கட்-ஆப் அடிப்படையில் சீட் வழங்கப்படும். சீட் கிடைத்த விபரங்கள் மாணவர்களுக்கு அலைபேசி, இ-மெயில் மூலம் தெரிவித்து ஆக.20க்குள் அட்மிஷன் நடத்தப்பட உள்ளது. இம் மாதத்திலேயே ஆன்-லைன் வகுப்புகள் துவங்க உள்ளதாக உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...