பத்தாம் வகுப்பில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் செய்முறை
தேர்வு எழுதாததால் அவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என குழப்பம்
ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகை பதிவேடு அடிப்படையில் 20 சதவீதமும்மதிப்பெண் கணக்கீடு செய்யப்படுகிறது.இதில் பலர் காலாண்டு அல்லது அரையாண்டு தேர்வு எழுதாமல் இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது.
தற்போது காலாண்டு, அரையாண்டு தேர்வில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் செய்முறை தேர்வு எழுதாதது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் தேர்ச்சி பெற தகுதி யானவர்களா, மதிப்பெண் எவ்வாறு கணக்கிடுவது என சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நீண்ட நாட்கள் பள்ளி வராதோர், செய்முறை தேர்வு எழுதாதவர் விவரம் சேகரிக்கப்படுகிறது. செய்முறை தேர்வு மட்டும் எழுதாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதா அல்லது குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதா எனகல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...