அரசு கலை கல்லூரி மாணவர் சேர்க்கை : சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள்.
கொரோனா
தொற்று காரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான
விண்ணப்பப்பதிவு இந்த ஆண்டு ஆன்லைனில் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை
அறிவித் தது .
அதன்படி , விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் ( ஜூலை ) 20 -
ந் தேதி தொடங்கி 31 - ந் தேதி வரை நடைபெற்றது . 109 அரசு கலை மற்றும்
அறிவியல் கல்லூரிகளில் உள்ள 92 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு சுமார்
3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர் .
இந்தநிலையில்
, மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கு
காலஅவகாசம் வழங்க கோரிக்கை விடுத்தனர் . அதனை ஏற்று , சான்றிதழ்களை
பதிவேற்றம் செய்ய இன்று ( திங்கட்கிழமை ) வரை அவகாசம் வழங்கப்பட்டு
இருந்தது .
எனவே , இதுவரை சான்றி தழ்களை பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் இன்று அதை செய் துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...