''பள்ளிச் சீருடைகளை, கைத்தறி
துணியில் தயார் செய்து உடுத்துவதன் வாயிலாக, கைத்தறி நெசவு தொழிலை
ஊக்குவிக்க முடியும்,'' என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு
தெரிவித்துள்ளார்.
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு,
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சத்குருவுடன் 'ஆன்லைன்'
வழியாக கலந்துரையாடினார். சத்குரு பேசியதாவது:மனிதர்களின் கரங்களால்
உருவாக்கப்படும் பொருட்களுக்கு, தனித்துவமான கலை நயமும், அழகுணர்ச்சியும்
இருக்கிறது. அவை, மனித உணர்ச்சியின் வெளிப்பாடாக இருப்பதை, நாம் உணர
வேண்டும்.பள்ளிகள், சுற்றுலா மற்றும் விமான துறைகளில், கைத்தறி ஆடைகளை
அறிமுகப்படுத்துவதால், நெசவுத் தொழிலை ஊக்குவிக்க முடியும்.
பள்ளிக்
குழந்தைகள், கைத்தறி துணிகளால் ஆன சீருடைகளை உடுத்துவதற்கு அரசு தேவையான
முயற்சிகளை எடுக்க வேண்டும்.ஒரு காலத்தில், ஆடை ஏற்றுமதியில் உலகின்
முன்னணி தேசமாக நாம் இருந்தோம். அந்த பெருமையை மீட்டெடுக்க
வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
அமைச்சர் ஸ்மிருதி
இரானி பேசுகையில், ''நவீன சந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில், கைத்தறி
ஆடைகளை பிரபலப்படுத்துவது தான், உண்மையான சவாலாக இருக்கிறது.
''நெசவாளர்களுக்கு சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக, மிகப்பெரிய வர்த்தக
நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். நெசவாளர்களிடம் இருந்து, நேரடியாகவே ஆடைகளை
கொள்முதல் செய்வதற்கு தேவையான முயற்சிகளை, மத்திய அரசு முயற்சி
மேற்கொண்டுள்ளது,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...