++ அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கனவு மாணவர் விருது! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
images%252828%2529
காஞ்சிபுரம் அடுத்த அங்கம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கனவு மாணவர் விருது வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த அங்கம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்கள் , அறிவியல் மற்றும் கிராமியக் கலையிலும் புதுமைகளை படைத்தலிலும் சிறந்து விளங்குகின்றனர். அவர்களில் சிறந்த மாணவர்களான இரா.தருண்பிரசாத் , மு.கலைமதி ஆகியோருக்கு டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் கனவு மாணவர் - 2020 விருது வழங்கப்பட்டது. கொரோனா பேரிடர் காரணமாக இஸ்ரோ முன் னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை , முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் செயலாளர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் இணையவழியில் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது அந்த விருதுகளை அறக்கட்டளை நிறுவனர் ஜெயராஜ் நேரடியாக பள்ளிக்கு சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தணிகை அரசு , அறிவியல் ஆசி ரியர் சேகர் , சீனுவாசன் உள்பட பள்ளி ஆசிரியர்கள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...