++ பள்ளிகள் திறப்பு எப்போது? நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
9116e4b5c55e9294505ebd0881b99e34109e17f03049b463fd352aa4ce32902a

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று அறிகுறியும் இல்லை. ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்றது என்றாலும் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய கல்வி அமைச்சக செயலாளர் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்று தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த தகவலால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...