1. ஓடும் மகிழுந்து வளைவுப்பாதையில் செல்லும்போது பயணியர் ஒருபக்கமாக சாயக் காரணம்?
A. ஓய்வில் நிலைமம்
B. இயக்கத்தின் நிலைமம்
C. திசைக்கான நிலைமம்
D. நேர்கோட்டு உந்தம்
2. கீழ்க்கண்ட எந்த நிகழ்வின் போது மின்தூக்கியின் நகர்விற்கேற்ப தோற்ற எடையின் மதிப்பு சுழியாகிறது?
A. மின்தூக்கி ஓய்வில் உள்ளது(a=0)
B. மின்தூக்கி புவியீர்ப்பு முடுக்க மதிப்பில் கீழே தடையின்றி விழுகிறது(a=g)
C. மின்தூக்கி a என்ற முடுக்க மதிப்பில் கீழே நகர்கிறது
D. மின்தூக்கி a என்ற முடுக்க மதிப்பில் மேலே நகர்கிறது
3. கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்கு சமமானது?
A.உந்த மாற்று வீதம்
B.திசை மற்றும் கால மாற்று வீதம்
C.உந்த மாற்றம்
D.நிறை வீத மாற்றம்
4. மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாக காட்சி அளிக்க காரணம்?
A.ராலே ஒளிச்சிதறல்
B.இராமன் ஒளிச்சிதறல்
C.டின்டால் ஒளிச்சிதறல்
D.மீ ஒளிச்சிதறல்
5. புதிய அதிர்வெண்கள் கொண்ட நிறமாலை வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.ராலே வரிகள்
B.ராமன் வரிகள்
C.ஸ்டோக்ஸ் வரிகள்
D.ஆண்டிஸ்டோக்ஸ் வரிகள்
6. லென்சின் குவிய தொலைவின் அலகு?
A.டயாப்டர்
B.மீட்டர்
C.நியூட்டன் மீட்டர்
D.டைன் செ.மீ
7. வயது முதிர்வு தூரப்பார்வை என்றழைக்கப்படுவது?
A.ஹைபர் மெட்ரோபியா
B.அஸ்டிக்மேட்டிசம்
C.பிரஸ்பையோபியா
D.மெட்ரோபியா
8. பொருளின் அளவிற்கு சமமான தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு?
A. f
B. ஈறிலாத்தொலைவு
C. 2f
D. fக்கும் 2fக்கும் இடையில்
9. பரும விதி என்பது?
A. மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் வாயுவின் பருமனுக்கு எதிர் தகவல் அமையும்.
B. மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும்.
C. மாறா வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயுவின் பருமன் அதில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் நேர்த்தகவில் இருக்கும்.
D. மாறாத வெப்பநிலையில் அழுத்தத்தின் எண்ணிக்கைக்கு எதிர்த்தகவில் இருக்கும்.
10.1 வோல்ட் என்பது?
A.1கூலும்/1விநாடி
B.1வோல்ட்/1ஆம்பியர்
C.1ஜூல்/1கூலும்
D.1கூலும்/1 ஜூல்
11. மின் உருகு இழையானது கீழ்கண்ட எந்த பொருட்களால் செய்யப்படுகிறது?
A.குறைந்த உருகுநிலை
B.அதிக உருகுநிலை
C.நடுநிலை
D.A&D
12. ஜூல் வெப்ப விதியின்படி ஒரு மின் தடையில் உருவாகும் வெப்பமானது?
I.அதன் வழியே பாயும் மின்னோட்டத்தின் இருமடிக்கு நேர் விகிதத்திலும்
II.மின் தடைக்கு நேர் விகிதத்திலும்
III.மின்னோட்டம் பாயும் காலத்திற்கு நேர் விகிதத்திலும்
IV. மின் தடைக்கு எதிர் விகிதத்திலும்
A.I II
B.I III
C.I II III
D.I III IV
13. LED பல்புகள் கீழ்க்கண்ட எந்த வேதிச் சேர்மங்களை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது?
A.கேலியம் சக்சினைடு& கேலியம் ஆர்சனைடு
B.கேலியம் ஆர்சனைடு& கேலியம் பாஸ்பைடு
C.கேலியம் கார்பைடு& சக்சினைல் பாஸ்பைடு
D. இவற்றில் எதுவுமில்லை
14. கூற்று: காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும்போது ஒளியின் திசை வேகம் அதிகரிக்கிறது.
காரணம்: எனவேதான் மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாக கேட்க முடிகிறது.
A. கூற்று சரி காரணம் தவறு
B. கூற்று தவறு காரணம் சரி
C. கூற்று காரணம் இரண்டும் தவறு
D. கூற்று காரணம் இரண்டும் சரி
15. பெரும்பாலான பேசும் கூடங்களின் மேற்பகுதி கீழ்க்கண்ட எந்த வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்?
A.பிரமிடு
B.நீள்வட்டம்
C.பரவளையம்
D.வட்டம்
16. மகப்பேறியல் துறையில் அல்ட்ரா சோனோகிராபி கருவியில் பயன்படுத்தப்படும் தத்துவம்?
A.டாப்ளர்
B.ரேடார்
C.எதிரொலி
D.சோனார்
17. ஒரு வினாடி நேரத்தில் 10⁶ சிதைவுகளை தரும் கதிரியக்கத் தனிமத்தின் அளவு?
A.பெக்கோரல்
B.க்யூரி
C.ரூதர்போர்டு
D.ராண்ட்ஜன்
18. பிட்ச் பிளண்ட் என்ற கதிரியக்க கனிம தாதுவிலிருந்து கண்டறியப்பட்ட தனிமம்?
A.புளூட்டோனியம்
B.தோரியம்
C.யுரேனியம்
D.சீசியம்
19.Fat man அணுகுண்டுடன் தொடர்புடையது?
A.யுரேனியம்
B.தோரியம்
C.சீசியம்
D.இவற்றில் எதுவுமில்லை
20. இந்தியாவின் முதல் அணு மின் நிலையம்?
A. கல்பாக்கம்
B. மேட்டூர்
C. தாராப்பூர்
D. கூடங்குளம்
21. ஹைட்ரஜன் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுக்கு இடையில் உள்ள தூரம்?
A.0.37A°
B.0.47A°
C.0.74A°
D.0.99A°
22. அலுமினியத்தின் கனிமம் என்றழைக்கப்படுவது?
A.பாக்சைட்
B.வெள்ளியம்
C.களிமண்
D.குரோமைட்
23. ஆனோடாக்கல் முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு?
A. தாமிரம்
B. அலுமினியம்
C. இரும்பு
D. வெள்ளியம்
24. சுவர்களுக்கு மினுமினுப்பு தன்மையை தருவது?
A.கால்சியம் ஹைட்ராக்சைடு
B.கால்சியம் கார்பனேட்
C.சோடியம் கார்பனேட்
D.சோடியம் பை கார்பனேட்
25.5×10⁻⁵ மோல்⁻¹ செறிவு கொண்ட நீர்த்த சல்பியூரிக் அமிலத்தின் pH மதிப்பு என்ன?
A.11
B.4
C.5
D.9
26. எத்தனாலை அமிலம் கலந்த k2cr2o7 ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது கீழ்க்கண்ட எந்த நிறமாக மாறுகிறது?
A.பச்சை
B.மஞ்சள்
C.ஆரஞ்சு
D.நீலம்
27. வானூர்திகளில் எடுத்துச்செல்லப்படும் சுமைகளில் வெடிபொருட்கள் உள்ளனவா என்பதனை கண்டறிய இது பயன்படுகிறது?
A.Cf²⁵²
B.Am²⁴¹
C.Co⁶⁰
D.Au¹⁹⁸
28. கதிர்வீச்சு பாதிப்பு 600R என்ற அளவில் இருக்கும் போது நிகழ்வது?
A. அபாயகரமான பாதிப்பு
B. மிகவும் அபாயகரமான பாதிப்பு
C. இறப்பு
D. இரத்தப் புற்றுநோய்
29. பொருந்தாதவை தேர்ந்தெடு
A.நியூட்டன்
B.கேஸ்கிரைன் தொலைநோக்கி
C.கிரிகேரியன்
D.கெப்ளர் தொலைநோக்கி
30.
கீல் முனையில் இருந்து 90 செ.மீ தூரத்தில் கைப்பிடி கொண்ட கதவொன்று 40 N
விசை கொண்டு திறக்கப்படுகிறது. கதவின் கீல் முனைப் பகுதியில் ஏற்படும்
திருப்புத்திறன் மதிப்பினை கணக்கிடுக.
A.360 N
B.2.25 N
C.36 N
D.0.5 N
31.10⁵ டைன் என்பது?
A.1 நியூட்டன்
B.1 விசை
C.1 நியூட்டன் மீட்டர்
D.1 ஜூல்
32. கீழ்க்கண்டவற்றுள் மனிதனின் கதிரியக்க பாதிப்பின் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான அளவு எவ்வளவு?
I.ஒரு வாரத்திற்கு 250 மில்லி சிவர்ட்
II.ஒரு வருடத்திற்கு 20 மில்லி சிவர்ட்
III.ஒரு மாதத்திற்கு 250 ராண்ட்ஜன்
IV.ஒரு வாரத்திற்கு 100 மில்லி ராண்ட்ஜன்
குறியீடுகள்:
A.I மற்றும்II
B.II மற்றும்IV
C.Iமட்டும்
D.I மற்றும்III
33. கீழ்க்கண்டவற்றுள் எது எத்தனாலிலிருந்து ஹைட்ரஜனைப் நீக்கம் செய்வதற்கு வினையூக்கியாக பயன்படுத்தப்படுகிறது?
A.சில்வர்
B.அலுமினியம்
C.தாமிரம்
D.பிளாட்டினம்
34. கீழ்கண்ட எந்த சேர்மம் பழச்சாற்றின் மணமுடையது?
A.எத்தனால்
B.அசிட்டிக் அமிலம்
C.எத்தில் எத்தோனேட்
D.சோடியம் ஹைட்ராக்சைடு
35. லெட் நைட்ரேட், பொட்டாசியம் அயோடைடுடன் வினைபுரிந்து கீழ்க்கண்ட எந்த வீழ்படிவை கொடுக்கின்றது?
A.வெண்மை நிற வீழ்படிவு
B.கருமைநிற வீழ்படிவு
C.மஞ்சள் நிற வீழ்படிவு
D.சிவப்பு நிற வீழ்படிவு
36.சுருங்கிய விழி கோளத்தினால் பின்வரும் எந்த பார்வை குறைபாடு ஏற்படுகிறது?
A.கிட்டப்பார்வை
B.தூரப்பார்வை
C.விழி ஏற்ப அமைவது திறன் குறைபாடு
D.பார்வை சிதறல் குறைபாடு
37.கிரிக்கெட் விளையாட்டு வீரர் வேகமாக வரும் பந்தை பிடிக்கும் பொழுது கையை பின்னோக்கி இழுக்கிறார் ஏன்?
A.உந்தத்தை குறைப்பதற்காக
B.கணத்தாக்கு குறைப்பதற்காக
C. நிலைமையை குறைப்பதற்காக
D.A மற்றும் B
38. கீழ்கண்டவற்றுள் கணத்தாக்கு விசையின் அலகு யாது?
I.கிகிமீவி-2
II.கிகிமீவி-1
III.நியூட்டன் மீ
IV.நியூட்டன் மீ-1
V.நியூட்டன் வி
குறியீடுகள்
A.I மற்றும் III
B.V மட்டும்
C.II மற்றும் IV
D.II மற்றும் V
39.விருந்தோம்பியின் உடலில் ஒரு மயக்கப் பொருளை செலுத்துவதன் மூலம் இவை கடிப்பதை விருந்தோம்பிகள் உணர முடிவதில்லை?
A. அட்டை
B. மண்புழு
C. கரப்பான் பூச்சி
D. பாசிகள்
40. தற்போது மயக்கமூட்டியாக குளோரோபார்ம் பயன்படுத்துவது இல்லை ஏன்?
A.குளோரோபார்ம் ஆக்ஸிஜனுடன் வினைபுரியும்போது நச்சுத்தன்மையுள்ள கார்போனைல் குளோரைடை உருவாக்குகிறது.
B.குளோரோபார்ம் எளிதில் ஆவியாகாத திரவம் ஆகும்.
C.குளோரோபார்ம் நைட்ரஜனுடன் வினைபுரிந்து நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மத்தை உருவாக்குகிறது
D. குளோரோபார்ம் நிலைப்படுத்தியுடன் சேர்க்கும் பொழுது நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மம் உருவாக்குகிறது.
41. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக.
காண்பவை சுடரின் நிறம்
அ.Ca2+. செங்கல் நிறம்
ஆ.Na2+ பொன்னிற மஞ்சள்
இ.Zn2+ பச்சை
ஈ.K+ கருப்பு
A.அ
B.ஆ
C.இ
D.ஈ
42.SACON மையம் எந்த நகரில் அமைந்துள்ளது?
A.சென்னை
B.ஹைதராபாத்
C.கோயம்புத்தூர்
D.பெங்களூர்
43. தவறான இணையைத் தேர்ந்தெடு
A.உலகப் புற்றுநோய் நாள் - பிப்ரவரி 4
B. உலக புகையிலை எதிர்ப்பு நாள்- மே 31
C. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்- நவம்பர் 5
D. மருந்துகளில் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் ஜூன் 26
44.
தமிழ்நாட்டில் கீழ்க்கண்ட எந்த அமைப்பானது பள்ளிகளில் நாப்கின்களை
எரிப்பதற்கான மலிவு விலை எரியூட்டிகளை வழங்கியதுடன் அவற்றை சிதைப்பதற்கான
குழிகளையும் ஏற்படுத்தியது?
A.WHO
B.NGO
C.UNICEF
D.UNESCO
45. லூட்டினைசிங் ஹார்மோன் (LH) கீழ்க்கண்ட எந்த நிலையில் உச்சநிலையை அடைகிறது?
A.மாதவிடாய் நிலை
B.பாலிகுலார் நிலை
C.அண்டம் விடுபடுதல் நிலை
D.லூட்டியில் நிலை
46.
கருவுறுதலுக்கு பின் 6 முதல் 7 நாட்களுக்குள் கருமுட்டையானது________
என்னும் நிலையில் கருப்பையின் சுவரில் (எண்டோமெட்ரியம்) பதிய
வைக்கப்படுகிறது?
A.கிராபியன் பாலிக்கிள்
B.கார்பஸ்லூட்டியம்
C.புரோஜஸ்டிரோன்
D.பிளாஸ்டோசிஸ்ட்
47. முதன் முதலில் நீரிழிவு நோயைக் குணப்படுத்துவதற்காக இன்சுலின் பயன்படுத்தப்பட்ட ஆண்டு?
A.1922 ஜனவரி 11
B.1920 மார்ச் 14
C.1923 ஏப்ரல் 27
D.1929 ஜூன் 27
48. பின்வரும் வாக்கியங்களை கவனிக்க.
I.ஒலிமூலம்(S) மற்றும் கேட்குநர்(L) இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும்போது
II.ஒலிமூலம்(S) மற்றும் கேட்குநர்(L)சம இடைவெளியில் நகரும்போது
III.ஒலிமூலமானது வட்டப்பாதையின் மையப்பகுதியில் அமைந்து கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது
மேற்கூறியவற்றில் எப்பொழுது டாப்ளர் விளைவு ஏற்படும்?
A.Iமற்றும் II
B.I மற்றும்III
C.இவை அனைத்தும்
D.எதுவுமில்லை
49. கீழ்காணும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
I.இவ்வலைகள் இயற்கையாகவே குறுக்கலைகள்
II.அலைநீளம் 4×10⁻⁷ முதல் 7×10⁻⁷ வரை இருக்கும்.
பின்வருவனவற்றுள் மேற்காணும் கூற்றுகளுடன் தொடர்புடையது எது?
A. ஒலி அலைகள்
B. X கதிர்கள்
C. அகச்சிவப்புக் கதிர்
D கண்ணுறு ஒளி
50. கீழ்கண்ட எந்த தாவரங்களில் விலங்குகள் மலட்டுத் தன்மை உடையவையாக காணப்படுகின்றன?
A. இரு மைய நிலை(2n)
B .மும்மைய நிலை(3n)
C.நான்மயநிலை(4n)
D.அன்யூபிளாய்டி (5n)
51. கூற்றுகளை காண்க
கூற்று1: வளர் கருவின் ஆரம்ப நிலையில் காணப்படுபவை ஒருமுறை நியூரான்கள் ஆகும்.
கூற்று 2: மூளையின் அக பரப்பான பெருமூளை புறணி கார்டெக்ஸ் பகுதியில் காணப்படுபவை பலமுனை நியூரான்கள் ஆகும்
கூற்று 3:கண்ணின் விழித்திரையிலும் நாசித்துளையில் உள்ள ஆல்ஃபேக்டரி எபிதீலியத்திலும் காணப்படுபவை இருமுனை நியூரான்கள் ஆகும்.
இவற்றில் தவறானது
A. கூற்று 1 மட்டும்
B. கூற்று 2 மட்டும்
C. கூற்று 3 மட்டும்
D. கூற்று 2 3
52. கூற்றுகளை காண்க
கூற்று 1:நியூரானின் சரிஉடலம் அல்லது பெரிகேரியோன் என்று அழைக்கப்படுவது சைட்டான் ஆகும்
கூற்று
2:இதன் மைய உட்கருவில் சைட்டோபிளாசம் நிரம்பி உள்ள பகுதி நியூரோபிளாசம்
என்றும் அதில் அடங்கியுள்ள பெரிய துகள்கள் நிசில் துகள்கள் என்றும்
அழைக்கப்படுகின்றன
கூற்று 3: நரம்பு செல்லில் செல்
நுண்ணுறுப்புகள் ஆன மைட்டோகாண்ட்ரியா ரிபோசோம் லைசோசோம் மற்றும் எண்டோபிளாச
வலை பின்னல் ஆகியவை காணப்படுவதில்லை
இவற்றில் சரியானவை
A. கூற்று 1 மட்டும்
B. கூற்று 1 2
C. கூற்று 2 3
D. கூற்று 1 2 3
53. ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம்?
A. சைட்டான்
B. ஆக்சான்
C. டென்ட்ரைட்
D. தசைகள்
54. கூற்றுகளை காண்க
கூற்று 1:நரம்பு செல்லில் உள்ள சைட்டானின் மீது மையலின் உறை போர்த்தப்பட்டிருந்த அது மையிலின் உறையுடைய நரம்பு செல்கள் ஆகும்
கூற்று 2:நரம்பு செல்லில் உள்ள சைட்டானின் மீது மையலின் உறை போர்த்தப்பட்டு இருந்தால் அவை மையலின் உறையற்ற நரம்பு செல்கள் ஆகும்
கூற்று 3:மூளையின் சாம்பல் நிற பகுதி மையலின் உறையுடன் கூடிய நரம்பு செல்களை கொண்டுள்ளது
கூற்று 4:மூளையின் வெண்மை நிறப் பகுதி மையலின் உறையற்ற நரம்பு செல்களை கொண்டுள்ளது.
இவற்றுள்......
A. கூற்று 1 2 சரி
B. கூற்று 3 4 சரி
C. அனைத்தும் சரி
D. அனைத்தும் தவறு
55. மூளையின் இருபுறபக்கவாட்டு கதுப்புகளையும் இணைக்கும் நரம்பு பகுதி?
A. தலாமஸ்
B. கார்பஸ் கலோசம்
C. பான்ஸ்
D. ஹைப்போதலாமஸ்
56. பொருத்துக
a. சிறு மூளை- 1.முன் மூளை
b. நிசில் துகள்கள்- 2. பின் மூளை
c. ஸ்வான் செல்கள்- 3. சைட்டான்
d. ஹைப்போதலாமஸ்-4. புற அமைவு நரம்பு மண்டலம்
e. அசிட்டைல் கோலின்-5. நரம்பு உணர்வு கடத்தி
A.23415
B.13425
C.12345
D.23145
57. பொருத்துக
a. ஹைப்போதலாமஸ்-1. உடல் சமநிலை
b. முகுளம்- 2. உறக்கச் சுயற்சி
c. பான்ஸ்- 3. அனிச்சை செயல்
d. சிறு மூளை- 4. பாலுறவுக் கிளர்ச்சி
e. தண்டுவடம்- 5. வாந்தி எடுத்தல்
A.42531
B.45213
C.12354
D.53421
58. பின்வரும் கூற்றுக்களை கவனி
கூற்று 1: அப்போ பிளாஸ்ட் வழியில் நீரானது செல்லின் பிளாஸ்மா சவ்வில் நுழைகிறது
கூற்று 2:சிம்பிளாஸ்ட் விழியில் நீரானது செல்சுவர் மற்றும் செல் இடைவெளியின் வழியாக நுழைகிறது
இவற்றில் தவறானது
A. கூற்று 1 மட்டும்
B. கூற்று 2 மட்டும்
C. இரண்டும்
D. இரண்டும் இல்லை
59. பொருத்துக
a. லியூகேமியா 1. இரத்த அழுத்தம்
b.AB ரத்த வகை 2. பெரிகார்டியம்
c.O ரத்த வகை 3. ஆன்டிபாடி அற்ற ரத்தம்
d.ஸ்பிக்மோமானோமீட்டர்4. ஆன்டிஜன் அற்ற இரத்த வகை
e. இதயம் 5. ரத்தப் புற்றுநோய்
A.54312
B.53412
C. 35421
D.13452
60. கூற்றுகளை கவனி
i.முதிர்ந்த இலைகளில் உள்ள கனிமங்கள் இளம் இலைக்கு இடம் பெயர்கின்றன
ii.இவ்விட பெயர்வு நிகழ்ச்சி வரண்ட தாவரங்களில் மட்டும் நடைபெறுகிறது
iii.P,S,N,K ஆகியவை விரைவாக இடம்பெயரும் தனிமங்கள் ஆகும்
iv. எளிதில் இடம் பெயராத தனிமம் Na
இவற்றுள் தவறானது
A. கூற்று i,iii மட்டும்
B. கூற்று ii,iv மட்டும்
C. கூற்று ii,iii,iv மட்டும்
D. எதுவும் இல்லை
61.பின்வரும் கூற்றுகளில் தவறானவை தேர்க
i. நியூரோஜனிக் இதயத்துடிப்பு நரம்புத் தூண்டலினால் உண்டாகிறது
ii. மனித இதயம் நியூரோஜனிக் வகையை சார்ந்தது
iii. மாறுபாடு அடைந்த சிறப்புத்தன்மை வாய்ந்த இதயத்தசை நார்களால் தூண்டப்படுவது மையோ ஜெனிக் இதயத்துடிப்பு ஆகும்
iv. மெல்லுடலிகள் மற்றும் முதுகெலும்பிகள் இதயத்துடிப்பு காணப்படுகிறது
இவற்றுள் தவறானது
A. கூற்று i,ii
B. கூற்று ii,iv
C. கூற்று iv மட்டும்
D. கூற்று ii மட்டும்
62. ரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது
A.வெண்ட்ரிக்கிள்- ஏட்ரியம்- சிரை -தமனி
B.ஏட்ரியம்- வெண்ட்ரிக்கிள்- சிரை- தமனி
C.ஏட்ரியம் -வெண்ட்ரிக்கிள்- தமனி -சிரை
D.வெண்ட்ரிக்கிள் சிரை- ஏட்ரியம்- தமனி
63. பொருத்துக
1. ஆக்சின் i. ஜிப்ரில்லா பியூஜிகுராய் அ. உதிர்தல்
2. எத்திலின் ii. தேங்காயின் இளநீர் ஆ. கணு விடை பகுதி நீட்சி
3. அப்சிசிக் அமிலம் iii. முளை குறித்து உறை இ. நுனி ஆதிக்கம்
4. சைட்டோகைனின் iv. பசுங்கணிகம் ஈ. பழுத்தல்
5. ஜிப்ரலின் v. கனிகள் உ. செல் பகுப்பு
A)1-iii-இ 2-v-ஈ 3-iv-அ 4-ii-உ 5-i-ஆ
B)1-ii-இ 2-iv-ஈ 3-iii-அ 4-v-உ. 5-i-ஆ
C)1-i-அ 2-ii-ஆ. 3-iii-இ 4-iv-ஈ 5-v-உ
D)1-v-அ. 2-iv-இ 3-iii-ஆ 4-i-ஈ. 5-ii-உ
64.
கூற்று 1: எண்டார்க் சைலம்-புரோட்டோ சைலம் மையத்தை நோக்கியும் மெட்டா
சைலம் வெளிப்புறத்தை நோக்கிய காணப்படுவது --எடுத்துக்காட்டு .. வேர்
கூற்று
2: எக்ஸார்க் சைலம் -புரோட்டோ சைலம் வெளிப்புறத்தை நோக்கியும் மெட்டா
சைலம் மையத்தை நோக்கியும் காணப்படுவது ---எடுத்துக்காட்டு... தண்டு
A. கூற்று 1 சரி 2 தவறு
B. கூற்று 1 தவறு 2 சரி
C. கூற்று 1 2 சரி
D. கூற்று 1 2 தவறு
65. தவறானது எது?
i. குளோரோபிளாஸ்ட் -நிறமற்ற கணிகம்
ii. குரோமோ பிளாஸ்ட்-மஞ்சள் சிவப்பு ஆரஞ்சு நிறமுடைய கணிகம்
iii. லியூகோ பிளாஸ்ட்-வெளிர் கணிகம்
A.i தவறு
B.ii. தவறு
C.iii தவறு
D.I and III தவறு
66. ஸ்ட்ரோமா பகுதியில் புரதச் சேர்க்கைக்கு தேவையான டிஎன்ஏ ............. மற்றும் பிற மூலக்கூறுகள் உள்ளன?
A.70 A ரைபோசோம்
B.70 S ரைபோசோம்
C.70 ரைபோசோம்
D.7 O ரைபோசோம்
67. கூற்றுகளை கவனி
i. முதன்மை நிறமி -பச்சையம்
ii. துணை நிறமி -கரோட்டினாய்டு
iii. வினை மையம்+ஒளித்தொகுப்பு=ஏற்பி நிறமே மூலக்கூறு மையம்
A. i, சரி ii,iii தவறு
B.i,ii சரி iii தவறு
C.i,ii, தவறு iii சரி
D.I தவறு ii,iii சரி
68. பொருந்தாததை தேர்வு செய்?
A. நிறமிகள்
B. இலையின் வயது
C. ஹார்மோன்
D. கனிமங்கள்
69. செயற்கை ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி மூலம் ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்தவர்?
A. மெண்டலீப்
B.C.N.R ராவ்
C. மெல்வின் கால்வின்
D. கிரப்ஸ்
70. ஒளிச்சேர்க்கையின் வேதியியல் நிகழ்வுகளை கண்டறிந்ததற்காக கால்வின் நோபல் பரிசு பெற்ற ஆண்டு?
A.1951
B.1915
C.1961
D.1916
71. அட்டையின் இனப்பெருக்க காலத்தில் கக்கூன் உருவாவதற்காக தற்காலிக கிளைடெல்லம் எந்த கண்டத்தில் உருவாகிறது?
A.6 -9
B.9-12
C.6-11
D.9-11
72. கூற்றுக்களை கவனி
i. அட்டையின் உணவுப்பாதையில் மிகப்பெரிய பகுதி வயிறு
ii. இது தொடர்ச்சியாக அமைந்த 10 அறைகளை கொண்டது
iii.இவ்வறைகள் வட்டத் துளைகள் மூலம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன
தவறானது
A.i மட்டும்
B.ii மட்டும்
C.iii மட்டும்
D.i and iii மட்டும்
73. பொருத்துக
i. பின் ஒட்டுறிஞ்சி -5 முதல் 8 வரையான கண்டங்கள்
ii. தொண்டை-19 ஆவது கண்டம்
iii. வயிறு-26 ஆவது கண்டம்
iv. மலத்துளை-27 முதல் 33 பழையான கண்டங்கள்
A .1234
B.4123
C.4231
D.3241
74. தவறானது எது/ எவை?
i.அட்டையின் சுற்றோட்ட மண்டலத்தில் நான்கு நீண்ட கால்வாய்கள் உள்ளன.
ii.ஒரு துளை உணவு பாதையின் மேல் புறத்திலும் மற்றொன்று விழுப்புரத்திலும் மற்ற இரண்டு, இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன.
iii. பக்கங்களில் அமைந்துள்ள கால்வாய்களும் உட்புறம் வால்வுகளை கொண்டு நுரையீரல் போன்று செயல்படுகின்றன.
iv.நான்கு கால்வாய்களும் கீழ்ப்புறத்தில் 24 ஆவது கண்டத்தில் ஒன்றாக இணைகின்றன.
A. 1,2
B.2,3
C.3,4
D.1,4
75.அட்டையின் உமிழ் நீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப்பொருள் எந்த நோய்க்கு மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன?
A. இரத்த சர்க்கரை அளவை குறைக்க
B. ரத்த அழுத்தத்தை குறைக்க
C. ரத்த அழுத்தத்தை அதிகரிக்க
D. ரத்தசர்க்கரை அளவை அதிகரிக்க
76. கூற்று 1:பாலிலா இனப்பெருக்கம் பெரும்பாலும் பூஞ்சைகளில் மட்டும் நடைபெறும்.
கூற்று 2:பாலிலா இனப்பெருக்கத்தின் போது பூஞ்சை இழையிலிருந்து ஒரு ஸ்போராஞ்சியம் தோன்றுகிறது.
A. கூற்று 1,2 சரி
B. கூற்று 1 சரி 2 தவறு
C. கூற்று 1 தவறு 2 சரி
D. கூற்று 1,2 தவறு
77. சரியானது எது /எவை?
i. மகரந்தத் தூள்கள் கோள வடிவம் உடையது
ii. மென்மையான வெளியுறை எக்ஸைன்
iii. கடினமான ஒரு உறை இன்டைன்
A.i மட்டும்
B.ii மட்டும்
C.iii மட்டும்
D.i,ii,iii
78. பொருத்துக
a. அனிமோஃபிலி-பூச்சி வழி மகரந்த சேர்க்கை
b. எண்டோமோஃபிலி-விலங்கு வழி மகரந்த சேர்க்கை
c. ஹைடிரோஃபிலி -காற்றுவழி மகரந்த சேர்க்கை
d.சூஃபிலி-நீர் வழி மகரந்த சேர்க்கை
A.3241
B.2413
C.3142
D.1342
79. சரியானது எது
i.குழந்தை பிறப்பிற்கு பிறகு பால் சுரப்பியில் இருந்து முதல் முதலில் வெளிவரும் பால் கொலஸ்ட்ரம் எனப்படும்
ii. பால் உற்பத்தியாவதை தூண்டுவது- புரோலாக்டின்
iii. பால் வெளியேறுவதை தூண்டுவது-ஆக்சிடோசின்
A.I,ii சரி
B.i,iii சரி
C.ii,iii சரி
D.i,ii,iii சரி
80. மெண்டலின் இரு பண்பு கலப்பின் பினோடைப் விகிதம்?
A.9:3:3:3
B.1:3:3:9
C.9:3;3;1
D.3:1:3:9
81.ஒவ்வொரு செல்லின் முதுமையை உணர்த்தும் கடிகாரம் ஆக செயல்படுவது
A. டீலோமியர்
B. சென்ட்ரோமியர்
C. சாட்டிலைட்
D. சாட் குரோம்
82. தவறானது
i. ஒரு சிற்றினத்தின் கேரியோடைப் வரைபட விளக்கம் இடியோகிரம் என அழைக்கப்படுகிறது
ii.இதில்
அனைத்து டிலோ நிலை குரோமோசோம்களும் ஒத்திசைவான குரோமோசோம் ஜோடிகளாக
அவற்றின் பல பண்புகளின் இறங்கு வரிசையில் இடம் பெற்றுள்ளன.
A.i மட்டும்
B.ii மட்டும
C.i,ii
D. எதுவும் இல்லை
83.i. நியூக்ளியோசைட் =ஹைட்ரஜன் காரம்+சர்க்கரை
ii. நியூக்ளியோடைடு= நியூக்கிளியோசைட்+பாஸ்பேட்
A.i ii சரி
B.I மட்டும் சரி
C.ii மட்டும் சரி
D.i,ii தவறு
84.ஓகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது?
A. ஹெலிகேஸ்
B. DNA பாலிமரேஸ்
C.RNA பிரைமர்
D.DNA லிகேஸ்
85.கதிரியக்க கார்பன் முறை கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
A.1965
B.1966
C.1956
D.1955
86.வட்டார இன தாவரவியல் எனும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்?
A. கோரானா
B. j.w. கார்ஸ் பெரகர்
C.ரொனால்டு ராஸ்
D. w.f. லிபி
87. பொருத்துக.
a. மெக்சிகோ-டீ ஜியோ வூ ஜென்
b. பிலிப்பைன்ஸ்-பீட்டா
c. இந்தோனேஷியா-சோனாலிகா
d. சீனா-IR 8
A.4321
B.3421
C.2341
D.3241
88. காமா தோட்டத்துடன் பொருந்துவது?
A.Co-68
B.CO-60
C.Co-61
D.Co-137
89.rDNA தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மருத்துவப் பொருள்களில் பொருந்தாதது?
A. இன்சுலின்
B. வளர்ச்சி ஹார்மோன்
C. ஹெப்பாடிட்டீஸ் பி தடுப்பூசி
D. குளுக்கோகான
90. பூசா கோமல் என்பது........... இன் நோய் எதிர்ப்புத் திறன் பெற்ற கிரகம் ஆகும்?
A. கரும்பு
B. நெல்
C. தட்டைப் பயிறு
D. மக்காசோளம்
91.குழந்தை உரிமைகள் சட்டம்?
A. Mar 2007
B. May 2007
C. Mar 2005
D. May 2005
92.மருந்துகளின்
போதை அல்லது மருந்துகளின் தவறான பயன்பாடு என்ற வார்த்தைக்கு பதிலாக
மருந்துகளை சார்ந்து இருத்தல் என்ற வார்த்தையை WHO பயன்படுத்த ஆலோசனை
வழங்கிய ஆண்டு
A.1988
B.1986
C 1984
D.1982
93.கீழ்கண்ட எந்த நிகழ்ச்சி முளைக்கும் விதைகளில் நடைபெறவில்லை என்றால் இளம் நாற்றுக்கள் விதைகளில் இருந்து வெளியே வர இயலாது?
A. சவ்வூடு பரவல்
B. நீராவிப்போக்கு
C. ஆஸ்மாலிஸ்
D. உள்ளீர்த்தல்
94. கோபர் கேஸ் என அழைக்கப்படுவது?
A. மாட்டுச்சாணம்
B. மீத்தேன் வாயு
C. மீத்தேன் வாயு
D. ஷேல் வாயு
95.மனிதனின் மைய நரம்பு மண்டலத்தையும் பக்க நரம்பு மண்டலத்தையும் பாதிக்கும் தனிமம்?
A. குரோமியம்
B. கேட்மியம்
C. PVC
D. ஈயம்
96. பொருந்தாதவை எவை?
A. நாப்தலின் அசிட்டிக் அமிலம்
B. இன்டோல் 3 பியூட்ரிக் அமிலம்
C. இன்டோல் 3 அசிட்டிக் அமிலம்
D. இன்டேல் புரோப்பியானிக் அமிலம்
97.கால தூதுவர் என்று அழைக்கப்படும் ஹார்மோன்?
A. மெலானின்
B. ப்ரோலாக்டின்
C. மெலடோனின்
D. தைராக்ஸின்
98. கரும்பில் உற்பத்தியாகும் சர்க்கரையின் அளவை அதிகரிக்க அவற்றின் மீது தெளிக்கப்பட்டது?
A. ஜிப்ரலின்
B. ஆக்சின்
C. எத்திலின்
D. சைட்டோகைனின்
99. குழந்தை பிறப்பினை துரிதப்படுத்தும் ஹார்மோன்?
A. வாசோபிரஸ்ஸின்
B. ப்ரோலாக்டின்
C. லூட்டினைசிங்
D. ஆக்சிடோசின்
100. பின்வரும் கூற்றுக்களை கவனி
கூற்று 1:சண்டை பயமுறுத்தும் அல்லது பறக்கும் ஹார்மோன் என்று அழைக்கப்படுபவை அட்ரீனலின்
கூற்று 2: ப்ரோஜெஸ்ட்ரோன் கருத்தரிப்பதற்கு கருப்பையை தயார் செய்தல் பங்கேற்கிறது
A. கூற்று 1,2 சரி
B. கூற்று 1 சரி
C. கூற்று 2 சரி
D. இரண்டும் தவறு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...