NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று

சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று

தமிழகம் முழுவதும் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.



இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரிய கிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளிக்கு சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

கொரோனா தொற்று உறுதியான 10-ம் வகுப்பு மாணவர் விடுதியில் தங்கியிருந்ததால் அவருடன் தொடர்பில் சக மாணவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது சக மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive