++ கர்நாடகா - பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு நிற்காமல் சென்ற அரசு பேருந்து. கல்வித்துறை அமைச்சரின் சேசிங்..! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
கர்நாடக மாநிலத்தின் கல்வியமைச்சர் சுரேஷ்குமார். இவர் கடந்த சில தினத்திற்கு முன்னதாக துமகூரு மாவட்டத்தில் உள்ள மதுகிரி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரில் புறப்பட்டு சென்றுள்ளார். 

இதன்போது அங்குள்ள நீலகொண்டா பகுதியில் பள்ளிக்கு செல்ல மாணவ - மாணவிகள் பேருந்திற்காக காத்துகொண்டு இருந்துள்ளனர்.

இதன்போது, அவ்வழியாக வந்த கர்நாடக அரசு பேருந்து, அந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் பள்ளி மாணவ - மாணவிகள் நேரம் ஆவதால் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனைக்கண்ட அமைச்சர் சுரேஷ்குமார், தனது காரின் மூலமாக பேருந்தை துரத்தி பிடித்துள்ளார்.

பின்னர் காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் சுரேஷ்குமார், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை பேருந்திற்கு வெளியே அழைத்து கண்டித்தார்.
மேலும், மாணவ - மாணவிகள் எங்கு பேருந்திற்காக காத்திருந்தாலும் பேருந்தை நிறுத்தி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், இனியும் இதுபோல செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...