Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு எப்போது? தமிழக அரசு ஆலோசனை!

1620452680145825

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்ததால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதோடு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கூட நடத்தப்படாத சூழலில், பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டதால், எந்த அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கல்வி கட்டணம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.





1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive