தமிழ்நாடு
சட்டமன்றத் தேர்தலில் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்று
மகத்தான வெற்றி மகுடம் சூடி , தமிழக முதல்வராக அரியணை ஏறும் தங்களுக்கு
தமிழகத்தின் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக
நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில்
பணியாற்றும் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் , ஆசிரியர்களும்
இவ்வெற்றியினால் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளோம் . இவ்வேளையில் 12 இலட்சம்
அரசு ஊழியர் , ஆசிரியர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப்
பாதுகாத்திடும் வகையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்து , பழைய
ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்திட விரைந்து அரசாணை வெளியிட ஆவண
செய்ய வேண்டும் என்றும் தங்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...