Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு (Surrender) மற்றும் பகுதி இறுதி முன்பணம் ( Part Final ) பெறுதல் சார்பான சில தகவல்கள் & EL சரண்டர் தெளிவுரை

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளிஆசிரியர்கூட்டணிதிருநெல்வேலிமாவட்டக்கிளையின்சார்பில் *ஈட்டியவிடுப்புஒப்படைப்பு (Surrender) மற்றும்பகுதிஇறுதிமுன்பணம் ( Part Final ) பெறுதல்சார்பானசிலதகவல்கள்* நெல்லைமாவட்டகிளையிலிருந்துஅதன்மாவட்டசெயலாளர்திரு.செ.பால்ராஜ் *மாவட்டகருவூலஅலுவலர் (DTO) மரியாதைக்குரியதிரு. ஜவஹர்சிந்தா அவர்களையும்மற்றும்திருநெல்வேலிமாவட்டமுதன்மைகல்விஅலுவலர் ( CEO ) மரியாதைக்குரியதிரு. சிவக்குமார்அவர்களையும்ஈட்டியவிடுப்புஒப்படைப்புமற்றும்பொதுவருங்காலவைப்புநிதிபகுதிஇறுதிமுன்பணம்பெறுதல்சம்பந்தமாகவும்அலைபேசியில்தொடர்புகொண்டு*
 
சிலசந்தேகங்களுக்குவிளக்கம்கேட்கப்பட்டது. இதுசம்பந்தமாகமரியாதைக்குரியமாவட்டகருவூலஅலுவலர்அவர்கள்கடந்தஆண்டுபோடப்பட்ட *அரசாணை GO (ms) No:48 நாள்: 27.4. 2020 ல்கோவிட் -19 பெருந்தொற்றுகாரணமாக 27.4.2020 முதல் 26.4 2021 வரைஓராண்டுகாலம்தடைசெய்யப்பட்டகாலமாக (Suspended for a period of one year from this 27.4.2020) எனகுறிப்பிடப்பட்டுஇருப்பதால்அந்தகாலத்திற்குசரண்டர்வழங்கஇயலாதுஎனவும் .... 1.5 .2021 க்குபிறகுசரண்டர்செய்யும்ஆசிரியர்அரசுஊழியர்களுக்கு 15 நாட்களுக்குமட்டும்சரண்செய்து அதற்குரியபணப்பலனைபெற்றுக்கொள்ளலாம்என்றும்... தற்போதுவெளியிடப்பட்டுள்ளஅரசாணை: 12 நாள்:08.02.2021அன்றுபோடப்பட்டுள்ளஅரசாணையின்படி (They shall be cancelled and earned leave re - credited to the leave account of the Govt.Servant. ) செயல்படவேண்டும்* என்றும்கூறினார்கள். கடந்தஆண்டு 2020 ஏப்ரல்மாதத்தில்சரண்விடுப்புசெய்துபணப்பலன்பெறமுடியாதஆசிரியர்கள்அரசுஊழியர்கள்இவ்வாண்டு 28.04.2021 க்குபிறகுகடந்தஏப்ரல்மாதத்திற்கானசரண்டரைஒப்படைப்புசெய்துபணப்பலன்பெறமுடியுமா? என்றுகேட்டதற்கு ... இதுகுறித்து *தெளிவுரைகேட்டு மாநிலகணக்காயர்அலுவலகத்திற்குதபால் *அனுப்பப்பட்டுள்ளதாகவும்அதற்கானதெளிவுரைவந்தபின்புதான்அதுகுறித்துமுடிவுசெய்யமுடியும்* எனவும்கூறினார்கள்

*Part Final குழப்பும் கல்வித்துறை* மேலும் *ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி ( TPF & GPF ) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதியில் இருந்து முன்பணம் பெறும்போது 75% சதவீத முன்பணத்தை அந்தந்த சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் அவர்களே ( Pay Drawing Officer ) ஒப்பளிப்பு செய்யலாம் எனவும்... *பகுதி இறுதி முன்பணம் பெறும் பொழுது அதாவது Part Final பெரும் பொழுது 50 சதவீதமான தொகையினை மட்டுமே சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் ( Pay Drawing Officer ) ஒப்பளிப்பு செய்ய முடியும்* எனவும்.... 75% சதவீதமான பகுதி இறுதி முன் பணம் பெறுவதற்கு அதற்கு அடுத்த நிலையில் உள்ள உயர் அலுவலர்தான் ( Next Higher officer) ஒப்புதல் வழங்க முடியும் எனவும் நமது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும் மாவட்ட கருவூல அலுவலர்* அவர்களும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் *நமது மாநில மையத்தில் விசாரித்த போது* ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு அதாவது *(Non teaching Staff) அலுவலக பணியாளர்களுக்கு மட்டுமே அது நடைமுறையில் உள்ளது* எனவும் ஆசிரியர்களுக்கு அதாவது *Teaching Staff களுக்கு அந்தந்த சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர் அவர்களே 75 % சதவீத பகுதி இறுதி முன்பணத்தை ஒப்பளிப்பு செய்யலாம்* எனவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

 

இது சார்பாக CEO & DTO விடம் கூடுதல் விவரம் கேட்டதற்கு அதற்கான அரசாணை உள்ளது என்று தெரிவித்து இருக்கிறார்கள். அந்த அரசாணை நகல் மரியாதைக்குரிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கேட்டிருக்கிறோம்.  (சங்கரன்கோவில் சார்நிலை கருவூல அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம் தபால் மட்டுமே உள்ளது.)

 

*நமது இயக்கத் தோழர்களும் இது சார்பாக ஏதாவது அரசாணைகள் இருந்தால் திருநெல்வேலி மாவட்ட செயலாளரின் தனி வாட்சப் எண்ணிற்கு அனுப்பி தரும்படி* தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி வணக்கம். தோழமையுடன் ...

செபால்ராஜ் *

மாவட்ட செயலாளர்*

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

 திருநெல்வேலி.

EL சரண்டர் தெளிவுரை

கடந்த ஆண்டு போடப்பட்ட அரசாணை GO (ms) No:48  நாள்: 27.4. 2020 ல்  கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக 27.4.2020 முதல் 26.4 2021 வரை ஓராண்டு காலம் தடைசெய்யப்பட்ட காலமாக (Suspended for a period of one year from this 27.4.2020) என குறிப்பிடப்பட்டு இருப்பதால் அந்த காலத்திற்கு சரண்டர் வழங்க இயலாது எனவும் ....

1.5 .2021 க்கு பிறகு சரண்டர் செய்யும் ஆசிரியர் அரசு ஊழியர்கள் அந்த ஓராண்டை கணக்கில் சேர்க்காமல் விட்டு விட்டு வழக்கம்போல் 15 (அ) 30 நாட்களுக்கு அவரவர் ஒப்படைப்பு மாதத்தில்  சரண் செய்து அதற்குரிய பணப்பலனை பெற்றுக் கொள்ளலாம் என்றும்...

 தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை: 12  நாள்:08.02.2021அன்று போடப்பட்டுள்ள அரசாணையின்படி (They shall be cancelled and earned leave re - credited to the leave account of the Govt.Servant. ) செயல்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

 கடந்த ஆண்டு 2020 ஏப்ரல் மாதத்தில் சரண் விடுப்பு செய்து பணப்பலன் பெற முடியாத ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் இவ்வாண்டு 28.04.2021 க்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதத்திற்கான  சரண்டரை ஒப்படைப்பு  செய்து பணப்பலன் பெற முடியுமா? என்று கேட்டதற்கு....

இது குறித்து தெளிவுரை  கேட்டு மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு தபால் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதற்கான தெளிவுரை வந்த பின்பு தான் அது குறித்து முடிவு செய்ய முடியும் எனவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே மே மாதம் முதல் அவரவர் EL சரண்டர் செய்யும் மாதத்தில் கொரோனா கால நிறுத்திவைப்பு ஓராண்டை (27.4.20 - 26.4.21) எந்தக் கணக்கீட்டிலும் சேர்க்காமல் அதற்கு முந்தைய கணக்கின் படி ஒப்படைப்பு செய்யலாம் என TNPTF  மாநில அமைப்பு தெளிவுரை வழங்கி உள்ளது. அனைவரும் மே மாதத்தில் சரண்டர் கோர முடியாது.

ஆசிரியர்கள்  இதனடிப்படையில் தங்கள் EL சரண்டர் ஒப்படைப்பு விண்ணப்பத்தினை சார்ந்த மாதத்தில் அளித்து பணபலனாக பெற்றுக் கொள்ளலாம்.

மே மாதம் முதல்  EL சரண்டர் விண்ணப்பம் அலுவலகத்தில் அளிக்கலாம். (27.4.20 - 26.4.21) ஓராண்டை கணக்கில் சேர்க்காமல் கடைசியாக நீங்கள் ஒப்படைப்பு செய்ததை வைத்து நாட்கள் இறுதி செய்யவும்.

எ.கா

ஏப்ரல் 2020க்கு பிறகு 15 நாள் ஒப்படைப்பு செய்திருக்க  வேண்டியவர்கள் (அதாவது 2019ஏப்ரல் முதல் 2020 ஏப்ரல் வரை EL ஒப்படைப்பு செய்யாதவர்கள்) தற்போது 15 நாட்களே ஒப்படைக்க முடியும்.

ஏப்ரல் 2020க்கு பிறகு 30 நாள் சரண்டர் செய்திருக்க  வேண்டியவர்கள் (அதாவது 2018 ஏப்ரல் முதல் 2020 ஏப்ரல் வரை EL ஒப்படைப்பு செய்யாதவர்கள்)  தற்போது 30 நாட்கள்  சரண்டர் செய்யலாம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive