NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

செப்டம்பர், அக்டோபரில் தொடங்கும் 3வது அலைக்கு தயாராக வேண்டும் - நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

202106050218439395_1_virus2._L_styvpf

இந்தியாவில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா இரண்டாவது அலை சமீப நாட்களாக குறைந்து வருகிறது. 4 லட்சத்துக்கு மேற்பட்டோரை தினமும் பாதித்து வந்த இந்த தொற்று தற்போது ஒன்றரை லட்சத்துக்கும் கீழே சரிந்து விட்டது. இதைப்போல உயிரிழப்புகளும் சரிந்துள்ளது.

இதன்மூலம் கொரோனா 2-வது அலையை இந்தியாக சிறப்பாக நிர்வகித்து இருப்பதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் கூறியுள்ளார். இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:

கொரோனாவின் முதல் அலையை இந்தியா எதிர்கொண்ட விதம் சிறப்பாக இருந்தது. அப்போது அமல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைகள் 2-வது அலையை கட்டுப்படுத்துவதற்கு ஏராளமான நம்பிக்கையை கொடுத்தன.

அதேநேரம் 2-வது அலை குறித்து தொற்றுநோய் நிபுணர்களின் வெளியிட்ட ஆய்வுகளும், அது வீரியமாக இருக்கும் என கூறவில்லை. ஆனால் இந்த முறை நடந்தேறிய மத நிகழ்வுகள், திருமணங்கள் போன்ற நிகழ்வுகளால் 2-வது அலை மிகுந்த வேகமாக பரவியது.

எனினும் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகள், ஆக்சிஜன் வங்கிகள் உருவாக்கல், ஆக்சிஜன் வினியோகத்துக்கு தொழில்துறையின் உதவிகள் போன்றவற்றால் 2-வது அலையை சிறப்பாக நிர்வகித்திருக்கிறோம். ரெயில்வே, விமான நிலையங்கள், ஆக்சிஜன் போக்குவரத்துக்காக ராணுவம் போன்றவற்றையும் நாம் பயன்படுத்தி இருக்கிறோம்.

மொத்தத்தில் நியாயமான முறையில் பணிகளை மேற்கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். கொரோனாவின் 2-வது அலையை சிறப்பாக கையாண்டதால், புதிய தொற்று எண்ணிக்கை சரிந்து வருகிறது.

இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையும் தவிர்க்க முடியாது என நிபுணர்கள் மிகவும் தெளிவாக கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த அலை இளம் தலைமுறையினரை அதிக அளவில் பாதிக்கும் எனவும் எச்சரித்திருக்கின்றனர்.

இந்த அலை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தொடங்கும் என தெரிகிறது. எனவே இதை எதிர்கொள்வதற்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, நமது மருத்துவ கட்டமைப்புகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.





2 Comments:

  1. இந்த வருடமும் ஓசியில் சம்பளம் வழங்க தயாராகும் அரசு ஆசிரியர்கள் மற்றும் வீட்டிலேயே உட்கார்ந்து சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் மானங்கெட்ட அரசாங்கம் 50 சதவீத ஊதிய குறைத்து மக்களுக்கு மீதி பணத்தை கொடுக்க வேண்டும் நிச்சயமாக இந்த சம்பளத்தை வாங்கி அதில் பாதி பணத்தை ஏழை எளிய பொதுமக்களுக்கு செலவு செய்யாத அரசு ஊழியரின் குடும்பம் நாசமா தான் போகும் பணம் நிலைக்காது

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive