NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு மத்தியப்பல்கலைக்கழகம் -Admission Notification!

நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.இரண்டு வருடங்களுக்கு முன்னர்வரை நானுமே அறிந்திராத விசயம். இன்று இப்பொழுது நண்பரொருவரிடம் பேசும் பொழுது அவருக்குமேதெரியவில்லே என்றும் தெரிய வந்தது.

மத்தியமனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின்சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்குஒன்றென "மத்தியபல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்றுபல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன.

இது போக, அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம், பாபா குலாம் ஷாபாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல்ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, காலிக்கோட்பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸாமாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டிஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும்கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் எனபிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

இதையெல்லாம்ஏன் இப்போது சொல்ல வருகிறேன்என்று கேட்டால்...

மீண்டும்ஒரு முறை இந்தப் பதிவின்முதல் பாராவை படியுங்கள்.

பொதுவாகஇந்த பல்கலைகழகங்களைப்பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்தெரியவே இல்லை. தமிழ்நாட்டில்இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது. இந்தபல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறுமாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கானஅட்மிஷன் தருகிறது. Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA EXONOMICS. இதுபோக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும் எம்பிஏகோர்ஸுகளும் பிஎச்டி கோர்ஸுகளும் தனித்தனியேநடத்தப்படுகின்றன.

இங்கே படிக்கும் மாணவர்களில் பேர் பாதி பேர்கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள்தமிழ்நாடு உட்பட.

ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால்முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள் வருகிறது. இது போக ஆண்கள்பெண்களுக்கு தனித்தனிஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. ஹாஸ்டல் கட்டணங்களும் மிகமிக குறைவே.

ஆனால் இப்படி ஒரு கல்விநிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு மாணாக்கர்களுக்குதெரியவே இல்லை என்பது வருத்தத்துக்குறியவிசயம்.

சரி.

எப்படிஇந்த பல்கலை கழகங்களில் சேர்ந்துபடிப்பது...

18 மத்தியபல்கலை கழகங்ளில் எந்த பல்கலைகழகத்திலும் வேண்டுமானாலும்சேர்ந்து படிக்க ஒட்டு மொத்தமாகஒரே ஒரு நுழைவுத் தேர்வுதான் நடத்தப்படுகின்றது. cucetexam. Central University common entrance exam.

+2 முடித்துஅறுபது சதவீதமதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத்தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.

நேற்றுமுதல் இந்த தேர்வுக்காக ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம்.

https://cutn.ac.in

மேலும்எல்லா விவரங்களும் இந்த தளத்தில் இருக்கின்றன. எந்தெந்த பல்கலை கழகங்களில் என்னென்னகோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய அந்தந்தபல்கலை கழகத்தின் இணைய தளத்தில் சென்றுபார்க்கலாம். பல்கலைகழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன்மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள்பெற்றுக் கொள்ளலாம்.

நிறைய பேருக்குத் தெரியப்படுத்துங்கள்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive