கொரோனா பாதிப்பு எந்த தீங்கு விளைவிக்காது என்ற அதீத நம்பிக்கையில், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை ஆபத்தில் தள்ள அரசு விரும்பவில்லை என்று வி.கே.பால் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பிறகு, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய நிதி ஆயோக் சுகாதாரத்துறை உறுப்பினர் வி.கே.பால், பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்யும் போது பல்வேறு பிரச்னைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
கொரோனா மூன்றாவது அலை நாட்டில் ஏற்பட்டால், அதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனக் கூறிய அவர், அரசு இதில் சரியான முடிவை எடுக்கும் என்றார். மேலும் கொரோனா பாதிப்பு எந்த தீங்கு விளைவிக்காது என்ற அதீத நம்பிக்கையில், குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை ஆபத்தில் தள்ள அரசு விரும்பவில்லை என்ற வி.கே.பால், ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி போட்ட பிறகு, பள்ளிகள் திறக்கப்படலாம் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...