NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Covid - RTPCR Test என்றால் என்ன? அதில் CT Value என்றால் என்ன?

ஆர்டிபிசிஆர் என்றால் என்ன? 
அதில் சிடி வேல்யூ என்றால் என்ன? 

டாக்டர். ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை 

RTPCR பரிசோதனையில் செய்யப்படுவது என்ன? 

nCoV19 அதாவது 
நாவல் கொரோனா வைரஸ் 19 ( இது ஆண்டைக் குறிக்கிறது) 

இந்த வைரஸ் முதலில் நோயாளியின் 
தொண்டை மற்றும் மூக்கு அதிலும் ஆழ் நாசிப்பகுதியில் இருக்கும் 

அங்கிருந்து பல்கிப்பெருகி கீழே நுரையீரலுக்குச் செல்லும் 

அறிகுறிகள் ஆரம்பித்த முதல் வாரத்தில் 
அதிகபட்சமாக மேல் சுவாசப்பாதையில் தொண்டை மற்றும் நாசியில் இருக்கும். 

இதை ஒரு குச்சியின் நுனியில் மெல்லிய தடவல் எடுத்து 

அதில் உள்ள வைரஸ்களை அப்படியே குடுவைக்குள் இருக்கும் வைரஸை பாதுகாக்கும் மீடியத்துக்குள் வைத்து 
நேராக ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படும் 

அங்கு அந்த வைரஸில் உள்ள ஆர்.என்.ஏ மரபணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு ரிவர்ஸ் ட்ரான்ஸ்க்ரிப்டேஸ் எனும் நொதி மூலம்
டி.என்.ஏ வாக உருமாற்றப்பட்டு பல லட்சம் மடங்காக பல்கிப்பெருக்கப்படும். இது தான் PCR எனும் Polymerase chain Reaction 

இப்போது அந்த மாதிரியில் எவ்வளவு மரபணுக்கள் இருக்கின்றனவோ அதற்கேற்றாற் போல் CT value வரும். 

பொதுவாக இந்த பெருந்தொற்றில் செய்யப்படும் இந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் 

கொரோனா வைரஸுக்கு உரிய மரபணுக்கள் இருக்கின்றனவா? என்று பரிசோதனை செய்யப்படுகின்றன 

 
ஈ- மரபணு ( E gene )

எஸ் மரபணு ( S gene) 

என் மரபணு ( N gene) 

ஓ. ஆர். எஃப் 1 ஏ, பி மரபணு ( ORF 1a and 1b)

ஆர்.டி.ஆர்.பி மரபணு (RDRP) 

இதில் 
ஈ மரபணு-  
இது அனைத்து பீட்டா கொரோனா வைரஸ்களிலும் பொதுவாக இருக்கும் மரபணுவாகும் . எனவே ஈ மரபணு இல்லை என்றால் அது கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று முடிவாகிவிடும். 

ஏனைய ஐந்தும் புதிய கொரோனா வைரஸுக்கு என்றே பிரத்யேகமானது. 

இதில் ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்றவாறு 
நாட்டிற்கு ஏற்றவாறு ஐந்தில் ஒன்று அல்லது இரண்டு மரபணுக்கள் இருக்கின்றனவா? என்று சோதிக்கப்படும்

இங்கு
ஓ.ஆர்.எஃப் 1 ஏ மரபணு பெரும்பான்மை சோதிக்கப்படுகின்றது . 

இந்த மரபணுக்களை சுழற்சி சுழற்சியாக பல்கிப்பெருக வைப்பார்கள் 
இதில் எத்தனை சுழற்சிக்குப் பிறகு அந்த மாதிரியில் உள்ள மரபணுவை இயந்திரம் கண்டறிந்தது என்பதே சைக்ளிகல் த்ரஷ்ஹோல்ட் வேல்யூ சுருக்கமாக CT VALUE. 

ஒருவரது மாதிரியில் அதிகமான வைரஸ்கள் இருந்தால் சுழற்சியில் சீக்கிரமே மரபணுவை இயந்திரம் கண்டறியும் 
எனவே CT VALUE குறைவாக இருக்கும் 

அதே மாதிரியில் குறைவான வைரஸ்கள் இருந்தால் அதிகமான சுழற்சியில் தான் மரபணுவை கண்டறியமுடியும் 
எனவே CT VALUE அதிகமாக வரும் 

ஐசிஎம்ஆர் இந்த சிடி வேல்யூ 35 என்று நிர்ணயித்துள்ளது 
அதாவது 35 சுழற்சிக்குப் பிறகும் மரபணுவை கண்டறிய இயலவில்லை எனில் நெகடிவ் என்று ரிப்போர்ட் வரும். 

35 சுழற்சிக்குள் கண்டறியப்பட்டால் பாசிடிவ் என்று வரும் 
கூடவே 
அந்த மரபணு பேரைப் போட்டு அருகில் 
E gene CT VALUE 23  
 ORF 1a gene CT VALUE 18 என்றெல்லாம் 
எழுதப்பட்டிருக்கும் 

இது ஒருவருக்கு அவர் அளித்த மாதிரியில் எவ்வளவு வைரஸ் இருந்தது என்பதை காட்டுகிறது. 

இதில் mild /medium / severe என்றால்லாம் முடிவுகளில் போடுவதை பார்த்து விட்டு மக்கள் அச்சப்படுகிறார்கள் 

உண்மையில் ஆர்டிபிசிஆர் ரிப்போர்ட் பாசிடிவ் அல்லது நெகடிவ் இதைச் சொல்வதோடு அதன் பங்கு முடிந்து விடுகிறது. 

அதில் உள்ள வைரஸ் லோடு ஆகியவற்றை வைத்து நோயாளிக்கு 
சாதாரண கொரோனா வருமா? 
தீவிர கொரோனா வருமா? என்று கணித்தல் இயலாது. அப்படி கணிக்கவும் கூடாது.

காரணம் 

நாம் பார்க்கும் சிடி வேல்யூ என்பது நாம் எடுத்த மாதிரியில் உள்ள வைரஸின் அளவை மட்டுமே கூறும் 

மாறாக நோயாளியின் உடலுக்குள் வைரஸ் தொடர்ந்து பல்கிப்பெருகிக்கொண்டே தான் இருக்கிறது. எனவே மாதிரியில் இருக்கும் வைரஸ் லோடு குறைவாக காட்டினாலும் 
உள்ளே நிஜமாக வைரஸ் லோடு அதிகமாக இருக்கலாம். 

எனவே சிடி வேல்யூ அதிகமாக இருக்கிறது என்பதற்காக அவருக்கு சாதாரண தொற்று வரும் என்றோ 

சிடி வேல்யூ குறைவாக இருக்கிறது என்பதற்காக அவருக்கு தீவிர தொற்று வந்துவிடும் என்றோ அச்சப்படவும் தேவையில்லை 

மேலும் வைரஸின் மரபணுக்கள் 
தொண்டை மற்றும் நாசியில் 28 நாட்கள் முதல் 35நாட்கள் வரை கூட பலருக்கும் இருக்கும் 
ஆனால் அதன் பல்கிப்பெருகும் தன்மையை இழந்து மிகவும் குறைவான அளவில் இருக்கும். 

எனவே தான் திரும்ப திரும்ப ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து நெகடிவ் என்று பார்க்க வேண்டும் என்று ஆசைபடக்கூடாது 

சாதாரண தொற்று பெற்றவருக்கு அவர் அறிகுறிகள் தோன்றியதில் இருந்து பத்து நாட்கள் வரை மட்டுமே வைரஸை பிறருக்கு பரப்பும் தன்மையுடன் இருப்பார். 
அதற்குப்பிறகு வைரஸ் பிறருக்குப் பரவாது. 

எனவே சிடி வேல்யூ என்பது கொரோனா தொற்றை உறுதி செய்யவும் / ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு நோய் பரவும் தன்மையை காட்டும் விசயமாக இருக்கிறது 

மாறாக அதை வைத்து நோயின் தீவிரத்தை அளவிடுவது தவறான போக்கு

காய்ச்சல் இருமல் உடல் வலி 
நுகர்தல் திறன் இழப்பு ஏற்பட்டால் உடனே ஆர்டிபிசிஆர் பரிசோதனை கொடுத்து விட்டு தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் 

நன்றி 

டாக்டர். ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive