Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கு ஜூன் 15-ல் தேர்வு: 5.38 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்

 
 
 
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு, ஜூன் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் 5.38 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்‌’ 2022-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டத்தின்கீழ் முதல் 3 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2025-26 கல்வியாண்டில் ரூ.25.80 கோடியில் 15 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவுக் கல்வியை வழங்க பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்குநரகம் முடிவு செய்தது. முதல்கட்டமாக 30,191 மையங்கள் மூலமாக 8 திருநங்கைகள் உட்பட மொத்தம் 5 லட்சத்து 38,156 கற்போர்களுக்கு கடந்த நவம்பர் முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு, ஜூன் 15-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தேர்வை சிறந்த முறையில் நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை மூலமாக துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

72 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

72 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive