
மலேசியாவில் பணிபுரிய பிஇ&பிடெக்
தேர்ச்சி பெற்று மூன்றில் இருந்து ஐந்து வருட பணி அனுபவத்துடன் 24 இருந்து
42 வயதிற்கு உட்பட்ட க்யூசி இன்ஸ்பெக்டர் (Cswip 3.1) பணிக்கு மாத வருமானம்
ரூ.70,000- 80,000, பைப்பிங் இன்ஜினியர் பணிக்கு ரூ.60,000-80,000,
திட்டமிடல் இன்ஜினியர்(Primevara P6) பணிக்கு ரூ 70,000-84,000, டெண்டரிங்
இன்ஜினியர் பணிக்கு ரூ. 70,000-76,000, பைப்பிங் ஃபோர்மேன் பணிக்கு
ரூ.54,000-62,400 ஆகும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி
பெறாதவர்கள் டிஐஜி & ஏஆர்சி வெல்டர்கள் சிஎஸ் பணிக்கு மாத வருமானம்
ரூ.41,600-50,000 & பைப் பீட்டர் பணிக்கு ரூ. 38,000-50,000 ஊதியமாக
வழங்கப்படும்.உணவு, விசா இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை
அளிப்பவரால் வழங்கப்படும். இந்த பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண்
பணியாளர்கள ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பபடிவம்.
கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வருகிற 29ம் தேதிக்குள் அனுப்பவும். கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...