சிற்பம், இசை, நாடகம், ஓலைச் சுவடி, கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், கடல் சார் வரலாறு மற்றும் கடல் சார் தொல்லியல் துறை, அயல் நாட்டு தமிழ்க்கல்வி துறை, மொழிபெயர்ப்புத் துறை, அகராதியியல் துறை, அறிவியல் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, இலக்கியத் துறை, மொழியியல் துறை, மெய்யியல் துறை, பழங்குடி மக்கள் ஆய்வு மையம், நாட்டுப் புறவியல் துறை, சித்த மருத்துவத் துறை, கட்டிடகலைத் துறை என 25-க்கும் மேற்பட்ட படிப்புகளை வழங்குகிறது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த பல்கலைக் கழகத்தில் படித்த பலர் இன்றைக்கு அரசின் உயர் பொறுப்புகளிலும், மத்திய அரசின் தொல்லியல் துறைகளிலும், போட்டித் தேர்வுகளில் வெற்றியாளர் களாகவும், குடிமைப் பணி உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களாகவும் பலர் இருக்கிறார்கள். திருச்சி, தஞ்சை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் மொழி மீது, இலக்கியத்தின் மீதும் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவியர் பலர் தங்கி படிக்கின்றனர்.
மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அனைத்து கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்படுகின்றன. துறை வாரியாக அனைத்து படிப்புகளிலு ம் முதல் 3 இடங்களில் வரும் மாணவ, மாணவியருக்கு அறக் கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் மாணவ, மாணவியருக்கு பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெறும். உலகெங்கிலும் இருந்து வருவோர்க்கெல்லாம் தமிழ் மொழியை, பண்பாட்டை, நாகரிகத்தை, கலை நலங்களைக் கற்பிக்கும் நிறுவனமாக, பண்பாட்டு ஆய்வரணாக இப்பல்கலைக் கழகம் திகழ்கிறது.
சீனா, ஜப்பான், போலந்து, செக்கோசுலோவேகியா, அமெரிக்கா, தென்னாப் பிரிக்கா முதலிய பல நாடுகளிலிருந்து வந்த மாணவர்களுக்குத் தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டுக்கல்வி வாய்ப்பை வழங்கியுள்ளது. ஒவ்வோராண்டும் இந்திய ஆட்சிப் பணிப் (ஐ.ஏ.எஸ்) பயிற்சியாளர்களுக்குத் தமிழ் மொழிப் பயிற்சியையும் வழங்குகிறது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...