பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கையில் மாற்றம் குறித்து...
இனிமேல் பிளஸ் 2-வில் எந்த பாடப் பிரிவை எடுத்து படித்திருந்தாலும் பாலிடெக்னிக் படிப்பில் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில் நுட்பக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக 2-ஆம் ஆண்டு சேருவதற்கான (‘லேட்ரல் என்ட்ரி’ முறை) முறை உள்ளது. கணிதம், இயற்பியல் வேதியியல் உள்ளிட்ட பாடங்களுடன் பிளஸ் 2 முடித்த மாணவா்கள், 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு அதன்பின் 2 ஆண்டு ஐடிஐ படித்தவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
முன்னதாக பிளஸ் 2-வில் கணித பாடத்தை பிரதானமாக எடுத்துப் படித்தவர்கள் மட்டுமே பாலிடெக்னிக் படிப்பில் நேரடி 2-ஆம் ஆண்டு வகுப்பில் சேரலாம் என்று விதி இருந்தது.
இந்த நிலையில், வணிகவியல் உள்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், வரும் கல்வியாண்டு முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழில் நுட்பக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையரின் அறிவுறுத்தலின்படி, பிளஸ் 2 தேர்வில் வணிகவியல் உள்பட அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் 2025-26-ஆம் கல்வியாண்டில், நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயபடிப்பில் சேர்க்கை செய்து கொள்ள அனைத்து பலவகை தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...