“தமிழ்நாட்டில்
பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத
உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதி செய்து
வருகிறோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 96 சதவிகிதத்தை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது. பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர் கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம்.தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது திராவிட மாடல் அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறும்.” என்று அவர் கூறியுள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...