Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாடு முழுவதும் புதிதாக தகுதி பெற்ற பட்டயக் கணக்காளர்கள் 9,057 பேருக்கு சான்றிதழ்

hindutamil-prod%2F2026-05-23%2F82yc2a91%2F1214512121 
இந்​தி​யப் பட்​டயக் கணக்​காளர்​கள் கழகம் (The Institute of Chartered Accountants of India - ICAI) சார்​பில் ஆண்​டு​தோறும் பட்​டமளிப்பு விழா நடை​பெறும். அப்​போது, புதி​தாக தகுதி பெறும் பட்​டயக் கணக்​காளர்​களுக்கு உறுப்​பினர் சான்​றிதழ்​கள் வழங்கி கவுரவிக்​கப்​படும்.
 

அந்த வகை​யில், 2026-ம் ஆண்​டுக்​கான பட்​டமளிப்பு விழா சென்னை உட்பட நாட்​டின் 23 முக்​கிய நகரங்​களில் நேற்று நடத்​தப்​பட்​டது. இதில், நாடு முழு​வ​தி​லும் புதி​தாக தகுதி பெற்ற 9,057 பட்​டயக் கணக்​காளர்​களுக்கு உறுப்​பினர் சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட்​டன. கடந்த ஜனவரி மாதம் நடை​பெற்ற சி.ஏ. தேர்​வு​களில் தேசிய அளவில் தரவரிசை பெற்ற சாதனை​யாளர்​கள் கவுரவிக்​கப்​பட்​டனர்.

பட்​டமளிப்பு விழா​வின் தொடக்க நிகழ்​வு​கள், மும்​பை​யில் நடை​பெற்​றன. இதில் பாரத ஸ்டேட் வங்​கி​யின் தலை​வர் சல்லா நி​வாசுலு செட்டி முதன்மை விருந்​தின​ராகக் கலந்​து​கொண்டு சிறப்​புரை​யாற்​றி​னார். ஐசிஏஐ தலை​வர் பிரசன்ன குமார் புதிய பட்​டயக் கணக்​காளர்​களுக்கு வாழ்த்​துரை வழங்​கி​னார். ஐசிஏஐ துணைத் தலை​வர் மங்​கேஷ் பாண்​டுரங்க் கினாரே உரை​யாற்​றி​னார். இந்த நிகழ்​வு​கள், அனைத்து மையங்​களி​லும் நேரலை​யாக ஒளிபரப்பு செய்​யப்​பட்​டது.

சென்னை கலை​வாணர் அரங்​கில் நடை​பெற்ற விழா​வில், சென்னை, சுற்​று​வட்​டாரப் பகு​தி​களைச் சேர்ந்த 450 புதிய பட்​டயக் கணக்​காளர்​களுக்கு உறுப்​பினர் சான்​றிதழ்​கள் வழங்​கப்​பட்​டன. ஐசிஏஐ மத்​திய கவுன்​சில் உறுப்​பினரும், பட்​டமளிப்பு விழா ஒருங்​கிணைப்​பாள​ரு​மான ராஜேந்​திர குமார் மற்​றும் மத்​திய கவுன்​சில் உறுப்​பினர் ஸ்ரீப்​ரியா ஆகியோர் தேர்​வு​களில் தரவரிசை பெற்ற 10 உறுப்​பினர்​களைப் பாராட்​டி, சான்​றிதழ்​களை வழங்​கினர். இந்த நிகழ்​வில் ஐசிஏஐ அமைப்​பின் தெற்கு மண்டல கவுன்​சில் (எஸ்​ஐஆர்​சி) உறுப்​பினர்​கள் அபிஷேக், ரேகா உமா சிவ்​ கலந்​து கொண்​டனர்​.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive