அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வந்தவர்கள், தங்களை பணி வரன்முறை செய்து, உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதையடுத்து ஆயிரத்து 146 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக சிறப்புத் தேர்வு நடத்தி, உதவி பேராசிரியர்களாக நியமிப்பது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆசிரியர் தேர்வு
இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு, ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு முன்பாக 3 ஆண்டுகளாக காலியாக இருந்த 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடத்த புதிதாக அரசாணை வெளியிட்டது.
இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், 2020-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி தங்களை பணிவரன்முறை செய்யக்கோரியும் கவுரவ விரிவுரையாளர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, கடந்த 2022-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, கவுரவ விரிவுரையாளர்களை பணி வரன்முறை செய்வது தொடர்பான 2020 அரசாணைப்படி தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் என கடந்த 2024 ஏப்ரலில் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக உயர் கல்வித் துறை, கல்லூரி கல்வி இயக்குநரகம், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கவுரவ விரிவுரையாளர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் அளவிலான குழுக்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அவர்களின் கோரிக்கையை ஏற்பது என்பது உச்ச நீதிமன்றம் வகுத்தளித்த போட்டித் தேர்வு நடைமுறை கொள்கையை நீரத்துப்போகச் செய்துவிடும் எனக்கூறி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர்.
மேலும், பணி வரன்முறை என்பதும், தேர்வு நடைமுறை என்பதும் வெவ்வேறானவை என்பதால் பணி வரன்முறையை உரிமையாக கோர முடியாது. எனவே அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 292 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...