நீட் மறு தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் தொழில்நுட்பக் கோளாறு.
நீட் மறு தேர்வு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் தொழில்நுட்பக் கோளாறால் தேர்வர்கள் தவித்து வருகின்றனர்.
தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய முயன்று வருவதாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
சர்வர் கோளாறு மற்றும் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்டவற்றை தீர்க்க தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் விரைவில் இந்த சிக்கல்கள் தீர்ந்து ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
மாணவர்கள் பீதியடைய வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுவரை சுமார் 4 லட்சம் பேர் வெற்றிகரமாக ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துள்ளதாகத் தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ தகவல் அளித்துள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...