![]() |
| இராஜீவ் காந்தி |
இயல் : அரசியல்
அதிகாரம்:48.வலியறிதல்
குறள் எண்:477
குறள்:
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
பொருள்:
எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்
Many strokes fell mighty oaks.
சிறு உளி மலையைப் பிளக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.
2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் .
பொன்மொழி :
“திறமை பிறப்பால் கிடைப்பதில்லை; பயிற்சியால் செதுக்கப்படுகிறது.”
Thought for the Day :
“Dream big, learn skills, work hard, and create your own opportunities.”
பொது அறிவு :
1.தமிழக அரசின் 2026 -ஆம் ஆண்டிற்கான " தகைசால் தமிழர் விருது" யாருக்கு வழங்கப்பட்டது?
திரு. எம். கிருஷ்ணசாமி.
2. "தகைசால் தமிழர் விருது "யாருக்கு வழங்கப்படும் ?
தமிழ் சமுதாய மேம்பாட்டிற்கும்,தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு தொண்டாட்றியவர்க்கு வழங்கப்படும்.
English words :
1. Tenacious – Never giving up easily, விடாமுயற்சியுள்ள.
2. Genuine – Truly sincere and real, உண்மையான.
புவியியலும் சுற்றுசூழலும் :
கிராம சுயராஜ்யம் என்பது காந்தியடிகளின் முக்கியக் கருத்து ஆகும்: ஒவ்வொரு கிராமமும் தனக்குத் தேவையான உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளைத் தானே தயாரித்துத் தற்சார்புடனும் சுதந்திரத்துடனும் இருக்க வேண்டும்.கைத்தொழில்கள்: பெரிய இயந்திரத் தொழிற்சாலைகளுக்கு மாற்றாக ராட்டை நூற்பது மற்றும் குடிசைத் தொழில்களை வளர்க்க வேண்டும்.
NMMS :
SAT -SOCIAL
சரியான இணையைத் தேர்வு செய்க.
(1) மன்சப்தாரி முறை - அக்பர்
(2) ஜப்தி முறை - ஔரங்கசீப்
(3) துசுக் - இ - பாபரி - கட்டிடக் கலை
(4) இரண்டாம் பானிபட் போர் - 1526.
விடை: (1) மன்சப்தாரி முறை
ஆகஸ்ட் 20
நீதிக்கதை
முயற்சி திருவினையாக்கும் – ஒரு நீதிக்கதை
ஒரு சிறிய ஊரில் பாலன் என்பவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிறிய மரச்சாமான் தொழில் செய்து வந்தார். ஆரம்பத்தில் அவருடைய பொருட்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்தனர். வருமானமும் குறைவாக இருந்ததால் குடும்பத்தை நடத்துவது சிரமமாக இருந்தது.
ஒருநாள் பாலன், “இந்தத் தொழிலால் நமக்கு என்ன பயன்? இதை விட்டுவிடலாம்” என்று நினைத்தார். அப்போது அவரது மனைவி, “நாம் முயற்சி செய்வதை நிறுத்திவிட்டால் எப்படி முன்னேற முடியும்? புதிய முறையில் முயற்சி செய்து பாருங்கள்” என்று ஊக்கப்படுத்தினார்.
அதன்பிறகு பாலன் தினமும் புதிய வடிவமைப்புகளைக் கற்றுக்கொண்டார். தரமான மரங்களைத் தேர்ந்தெடுத்து, அழகான மேசைகள், நாற்காலிகள், சிறிய அலமாரிகள் போன்றவற்றை உருவாக்கினார். ஆரம்பத்தில் பலமுறை தவறுகள் ஏற்பட்டன. சில பொருட்கள் விற்காமல் போயின. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை.
சில மாதங்களுக்குப் பிறகு, அவரது பொருட்களின் தரம் மற்றும் அழகு பற்றி ஊர் முழுவதும் பேசத் தொடங்கினர். வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். சிறிய தொழில், பெரிய கடையாக வளர்ந்தது.
பாலன் தனது குடும்பத்தினரிடம், “நாம் வெற்றி பெற்றதற்கு காரணம் ஒரே நாளில் கிடைத்த அதிர்ஷ்டம் அல்ல; தோல்விகளுக்குப் பிறகும் தொடர்ந்து செய்த முயற்சிதான்” என்றார்.
நீதி:
👉 முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து உழைத்தால், சாதாரண முயற்சியும் பெரிய வெற்றியாக மாறும். அதுவே “முயற்சி திருவினையாக்கும்.”
இன்றைய செய்திகள்







.jpeg)
Done anna
ReplyDelete