Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

B.Ed மாணவர் சேர்க்கை 1,800 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை

hindutamil-prod%2F2026-08-15%2Fjjddch0s%2F14 
பி.எட். சேர்க்​கைக்​கான ஆன்​லைன் கலந்​தாய்​வில் முதல்​கட்​ட​மாக 1,800 மாணவர்களுக்கு கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​ட​தாக கல்​லூரி கல்வி இயக்கக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தமிழகத்​தில் 7 அரசு கல்​வி​யியல் கல்​லூரி​களும், 14 அரசு உதவி​பெறும் கல்​லூரி​களும் உள்​ளன. இக்​கல்​லூரி​களில் பி.எட். படிப்​பில் 2,040 இடங்​கள் ஒற்​றைச்​சாளர முறை​யில் பொது கலந்​தாய்வு மூலம் நிரப்​பப்​படு​கின்​றன.

அந்த வகை​யில் நடப்பு கல்வி ஆண்டு (2026-27) பி.எட். சேர்க்​கைக்​கான ஆன்​லைன் விண்​ணப்பப் பதிவு ஜூன் 19-ம் தேதி தொடங்கி ஜூலை 31-ம் தேதி முடிவடைந்​தது. மொத்​தம் 3149 மாணவ, மாணவி​கள் விண்​ணப்​பித்​தனர். அவர்​களின் தரவரிசை பட்​டியல் ஜூலை 31-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது.

இதைத்​தொடர்ந்​து, விருப்​ப​மான கல்​வியியல் கல்​லூரியை தேர்வு செய்​வதற்​கான இணை​ய​வழி கலந்​தாய்வு ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி முடிவடைந்​தது. கலந்​தாய்​வில் பங்​கேற்ற மாணவர்​கள் தங்​களுக்​கான பிடித்​த​மான கல்​லூரியை தேர்வு செய்​தனர்.

இந்​நிலை​யில், முதல்​கட்​ட​மாக 1,800 பேருக்கு கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை ஆன்​லைனில் நேற்று வெளி​யிடப்​பட்​டது.

மாணவர்​கள் தங்​கள் ஆன்​லைன் விண்ணப்ப ஐடி-யை பயன்​படுத்தி www.twise.ac.in என்ற இணை​யதளத்​தில் கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணையை பதி​விறக்கம் செய்​து​கொள்ளலாம்.

ஒதுக்​கீ்ட்டு ஆணை பெற்ற மாணவர்​கள் சம்​பந்​தப்​பட்ட கல்​வி​யியல் கல்​லூரி​யில் ஆகஸ்ட் 17 முதல் 21-ம் தேதிக்​குள்​ சேர வேண்​டும்​ என்​று கல்​லூரி கல்​வி இயக்​கக அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive