தகவல்
இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு வர வேண்டிய வழக்கு மாலை 3:45க்கு விசாரணைக்கு வந்தது.
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சார்பில் திரு ப.சிதம்பரம் அவர்கள் தங்களுடைய வாதத்தை நிறைவு செய்யும் படி நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
திரு.ப.சிதம்பரம் அவர்கள் Rule 9 குறித்தும், முதுகலை ஆசிரியர்களாக தற்காலிக நியமனம் பெறுவதால் தாங்கள் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகவே தொடர்வதாக கருத வேண்டும் அதில் தங்களுக்கு Lien உள்ளது என்று பேசினார்.
அந்தக் கருத்தில் நீதிமன்றத்திற்கு உடன்பாடு இல்லை.
இந்தியாவில் அனைத்து பணிகளுக்குமே மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கூட நியமனம் வழங்கும் போது தற்காலிக நியமனம் என்று ஆணை வழங்குவது நடைமுறை.
தற்காலிக நியமனமாக முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் பணிவரன்முறை செய்யப்படுகின்றனர், தகுதிகாண் பருவத்தை முடிக்கின்றனர், தற்காலிக நியமனமாக இருந்தாலும் நியமனம் செய்யப்பட்ட அன்றே அந்த பணித் தொகுதியின் முழு உறுப்பினராக ஆகி விடுகின்றனர். இதற்கு அரசுத் தரப்பு பதிலளிக்க வேண்டும், என நீதிபதிகள் கூறினர் .
அரசுத் தரப்பில் உரிய ஆவணங்களை பின்னர் சமர்ப்பிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு வாதங்கள் முழுமையாக வைக்கப்படவில்லை.
இன்றைய வாதத்தில் நடந்த மிக முக்கியமான விஷயம் பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதால் ஏற்படும் காலியிடத்தில் இன்னொரு பட்டதாரி ஆசிரியரை நியமிக்கும் போது எவ்வாறு தங்களுக்கு பழைய இடத்தில் உரிமை (lien) இருப்பதாக கருத முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பட்டதாரி ஆசிரியர்கள் தரப்பில்
மூத்த வழக்கறிஞர்கள்
திரு. ரவிபிரகாஷ் மெஹரோட்ரா,
திரு.எஸ்.எஸ்.சுந்தர்
திரு. அஜ்மல்கான் ஆகியோர் வாதிட்டனர்.
அவர்களுக்கு உதவியாக
திருமதி.சாந்தா தேவி இராமன்
திரு. இம்ரான்,
திரு. ஷில்ப் வினோத்,
திரு. கர்வேஷ் காப்ரா
ஆகிய வழக்கறிஞர்களும் களமிறங்கினர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...