Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிறப்பு டெட் தேர்வு முடிவுகள் விரைவில்

 சிறப்பு டெட் தேர்வு முடிவுகள் விரைவில் - செப். 10-க்குள் வெளியாகும் என தகவல் - 24-ஆம் தேதி அரசு கொள்கை முடிவு தாக்கல்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் பணி செய்யும் ஆசிரியர்களுக்கான TET தேர்வை நடத்தியது.

தமிழ்நாடு முழுவதும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இத்தேர்வில் தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டை எழுதினார்கள்.

இதனிடையில் தேர்வர்கள் முடிவை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாக உயர்நீதிமன்றம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதித்தது.

TET தேர்வு

செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முடிவிற்காக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் காத்திருக்கிறார்கள்.

உயர்நீதிமன்றத்தின் இந்த தடையின் காரணமாக தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஆசிரியர் தேர்வு வாரியம் இறுதி விடைக்குறியீட்டை தயார் செய்து அனைத்து OMR விடைத்தாள்களையும் மதிப்பீடு செய்துவிட்டதாக தகவல்கள் கிடைக்கின்றன. ஆகவே வருகின்ற 24-ஆம் தேதி தமிழ்நாடு TET தேர்வு மதிப்பெண் குறைப்பு தொடர்பான கொள்கை முடிவை உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கும் போது, TET தேர்வு முடிவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

1044896





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive