ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 'டெட்' தேர்வு விலக்கு தீர்மானத்தால் தீர்வு ஏற்படாது. இது ஆசிரியர்களை ஏமாற்றும் வேலை.

'டெட்'
கட்டாயம் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பு. நீட் தேர்வுக்கும் சட்டசபையில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அத்தேர்வு தொடர்கிறது.
சிறப்பு
'டெட்' தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயம் செய்வது அந்தந்த மாநில
அரசின் கொள்கை முடிவு. 'டெட்' தேர்வு விவகாரத்தில் சிறப்பு தேர்ச்சி
மதிப்பெண்ணை குறைத்து நிர்ணயம் செய்யும் முடிவு தான் சிறந்தது என்றனர்.
மானியக் கோரிக்கையில் ஏமாற்றம்
கல்வி
மானியக் கோரிக்கையில் ஆசிரியர் நலன் சார்ந்த அறிவிப்புகள் இல்லை. துறை
இயக்குநர் பதவி ஒரு மாதமாக காலியாக உள்ளது. இதுதவிர 32 கல்வி மாவட்ட
அலுவலர்கள், ஆயிரக்கணக்கான தலைமையாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
இதை நிரப்ப நடவடிக்கை இல்லை. சமவேலைக்கு சமஊதியம் என்ற இடைநிலை
ஆசிரியருக்கு நிலவும் சம்பள முரண்பாடு, பகுதிநேர ஆசிரியரின் பணி நிரந்தரம்
போன்ற முக்கிய பிரச்னைகளுக்கான தீர்வும் இல்லாதது ஏமாற்றம் என ஆசிரியர்கள்
தெரிவித்தனர்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...