Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.08.2026




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:480

குறள்:
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

பொருள்:

தன்னுடைய செல்வத்தின் அளவை ஆராயாது அளவு கடந்து உதவி வந்தால், அவன் செல்வத்தின் அளவும் விரைவில் கெட்டுப் போகும்.

பழமொழி :

Necessity has no law.

ஆபத்துக்கு பாவமில்லை.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. 1. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்தக் காரியத்தையும் நான் செய்ய மாட்டேன். 

 2. பேச்சு ஒழுக்கம்: சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன். தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன். பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

பொன்மொழி : 

“இளைஞர்களின் கனவுகளுக்கு சிறகுகள் தருவது திறமையும் விடாமுயற்சியும்.”

Thought for the Day :

“The future belongs to young people who turn their potential into skills.” 🚀

பொது அறிவு : 

1.ஒரு நாளைக்கு சுரக்கப்படும் உமிழ்நீர் அளவு எவ்வளவு?

 1.5 லிட்டர்.

 2. இறந்த மனிதனின் இதயத் துடிப்பு அடங்கும் நேரம் எவ்வளவு?

 20 நிமிடங்கள்.

English words :

1.Generous – Willing to give and share freely, தாராள மனப்பான்மை கொண்டவர்.

2.Courageous – Brave and able to face danger or difficulty, துணிச்சலான.

புவியியலும் சுற்றுசூழலும் :

இலட்சத்தீவுகளில் பெரும்பாலானவை பவளத் தீவுகள் (Coral Islands).
இங்கு அழகான கடற்கரைகள், பவளப்பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் காணப்படுகின்றன.
தேங்காய் சாகுபடி மற்றும் மீன்பிடித்தல் முக்கியமான தொழில்களாகும்.
சுற்றுலாவிற்கும் புகழ்பெற்றது.

ஆகஸ்ட் 25

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நினைவுநாள்


நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, நீல் ஆம்ஸ்ட்ரோங், ஆகத்து 5, 1930ஆகத்து 25, 2012) ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். 

1969, சூலை 20 இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார்.

ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.

நீதிக்கதை

 ஒரு சிறிய கிராமத்தில் கதிர் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பீட்சா. பர்கர், நூடுல்ஸ் போன்ற நவீன உணவுகள் மிகவும் பிடிக்கும். ஆனால் அவனுடைய பாட்டி எப்போதும் கம்பங்கூழ், கேழ்வரகு களி, கீரை , சிறுதானிய உணவுகள் போன்ற பாரம்பரிய உணவுகளைச் சமைப்பார்.

ஒருநாள் கதிர் பாட்டியிடம்,

“பாட்டி, ஏன் எப்போதும் இந்தப் பழைய காலத்து உணவுகளையே சமைக்கிறீர்கள்? இப்போது எல்லோரும் வேறு விதமான உணவுகளைத்தானே சாப்பிடுகிறார்கள்?” என்று கேட்டான்.

பாட்டி சிரித்துக்கொண்டே , “கதிர், நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்கள். அவர்கள் சாப்பிட்ட உணவுகள் உடலுக்கு தேவையான சத்துக்களை அளித்து, நீண்ட நேரம் சுறுசுறுப்பாக இருக்க உதவின. நம் பாரம்பரிய உணவுகளில் நம் மண்ணின் அறிவும், உழை ப்பும், கலாச்சாரமும் அடங்கியிருக்கிறது,” என்றார்.

சில நாட்களுக்குப் பிறகு பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடை பெற்றது. கதிரும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டான். போட்டிக்கு முன் பாட்டிகொடுத்த சத்தான பாரம்பரிய உணவைச் சாப்பிட்டுவிட்டு சென்றான். போட்டியில் கதிர் உற்சாகமாக ஓடி வெற்றி பெற்றான்.

அப்போது அவனுக்கு பாட்டியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. அன்று முதல், நவீன உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், சத்தான பாரம்பரிய உணவுகளையும் தன் உணவுமுறையில் சேர்த்துக்கொள்ளத் தொடங்கினான்.

நீதி:

🌱 பாரம்பரிய உணவு என்பது வெறும் பழைய உணவு அல்ல; அது நம்முன்னோர்களின் அறிவையும், நம் மண்ணின் வளத்தையும், ஆரோக்கியமான வாழ்வியலையும் கற்றுத்தரும் செல்வமாகும்.

இன்றைய செய்திகள்

25.08.2026

🗒️பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகளை மாற்றக்கூடாது’ - அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார் .

🗒️காவிரியில் தமிழ்நாட்டுக்கு 9,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் - ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

🗒️ரஷ்ய அதிபர் புதின் - இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பில்  இருதரப்பு உறவு, உலகளாவிய விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்* 
🏀உலக பேட்மிண்டன்: பிரான்ஸ் வீரர் பெண்கள் பிரிவில் அன்சே யங்குக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

Today's Headlines

🗒️ “Physical Education classes should not be changed in schools,” Minister Rajmohan said.

🗒️ The Cauvery Water Regulation Committee has recommended releasing 9,000 cusecs of water to Tamil Nadu.

🗒️ In the meeting between Russian President Vladimir Putin and the Indian External Affairs Minister, discussions on bilateral relations and global issues were given importance.

Sports News

🏀 World Badminton: French player An Se-young won the women’s championship title.

Covai women ICT_போதிமரம்

  





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive