மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற விகிதத்தில் இந்த நிதி பங்கீடு அமையும். இதற்கிடையே, மும்மொழி கொள்கையில் விலக்கு உட்பட சில கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால் தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான பிஎம் பள்ளி திட்டத்தில் சேருவதற்கு தமிழகம் மறுத்துவிட்டது.
இதையடுத்து தமிழகத்துக்கான ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விதிட்ட நிதியை 2024–25-ம் கல்வியாண்டு முதல் மத்திய அரசு நிறுத்திவிட்டது.
ஒட்டுமொத்தமாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.5,109 கோடி நிதியானது தமிழகத்துக்கு வழங்கப்படாமல் மத்திய அரசு நிலுவை வைத்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறும்போது, “மத்திய அரசு 3 ஆண்டுகளாக நமக்கு தரவேண்டிய நிதியை வழங்கவில்லை. இதுசார்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது, நீதிபதிகள் உத்தரவின்படி 2024–25 மற்றும் 2025–26-ம் ஆண்டுகளுக்கான ஆர்டிஇ திட்ட நிதி ரூ.714 கோடியை மட்டும் மத்திய அரசு வழங்கியது.
எனினும், பிற திட்டங்களுக்கான நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால் மாநில அரசின் பங்களிப்பு நிதியை கொண்டு தற்போது திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் 2024–25, 2025–26-ம் கல்வியாண்டுகளில் மாநில அரசு ரூ.2,014 கோடி செலவிட்டுள்ளது. நடப்பு 2026–27-ம் கல்வியாண்டில் இடைக்கால நிதியாக, ரூ.647 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நீண்ட காலத்துக்கு மாநில அரசே இந்நிலையை சமாளிக்க முடியாது. ஆசிரியர் பயிற்சிகள், மாணவர்களுக்கான கற்றல் திட்டங்கள் உள்ளிட்ட கல்வி சார்ந்த செயல்பாடுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது”என்றனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...