*தமிழ்நாடு அரசுப் பள்ளிகளுக்கான பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் தொடர்பான சுற்றறிக்கை*
முதற்கட்டமாக மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்து பெற்றோருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் 29.08.2026, *சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை* அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும்.
இதன்படி, பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக *பார்வை-2இல் கண்டுள்ள அரசாணை பக்கம் 22 முதல் 25 வரை* கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி *கூட்டத்திற்கான அழைப்பிதழை* பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு 27.08.2026 வியாழக்கிழமைக்குள்ளாக மாணவர்கள் மூலம்,
*புலனக் குழுச் (வாட்ஸ்அப்) செய்திகள், துண்டுப் பிரசுரங்கள்* மூலமாக தலைமையாசிரியர்கள் அனுப்பி வைக்கவேண்டும்.
மேலும், பெற்றோர்களுக்கான *விழிப்புணர்வுக் கூட்டத்தை பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில்* பள்ளி மேலாண்மைக் குழுவின் தற்போதைய உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட வேண்டும்.
இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் *பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரது வருகை பதிவு விவரத்தினை* பெற்றோர் கூட்டம் நடைபெறும் 29.08.2026 அன்று பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி தலைமையாசிரியர் தவறாது பதிவு செய்ய வேண்டும்.
*Login to School Login - https://emis.tnschools.gov.in*
*Select "School" Tab*
*Select "SMC Reconstitution 2026-2028" Module*
*Select Meeting Type - "Parents Awareness meeting attendance*
"விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை பதிவிட வேண்டும்.
விழிப்புணர்வுக் கூட்டத்தில் *பங்கேற்றவர்களின் குழு புகைப்படத்தை* பதிவேற்றம் செய்ய வேண்டும்.இறுதியாக *'Submit Attendance'* தேர்வு செய்தவுடன் *பதிவு செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் பங்கேற்பாளர்களின்* எண்ணிக்கையுடன் *மொத்த பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை* காண்பிக்கப்படும்.
அதனை சரிபார்த்து சரியாக இருப்பின் *மீண்டும் 'Submit'* தேர்வு செய்தவுடன் தங்கள் பள்ளியின் பள்ளிமேலாண்மைக் குழு விழிப்புணர்வுக் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உறுதிசெய்யப்படும்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...