Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

hindutamil-prod%2F2026-08-24%2Fw5ondaqf%2F1 
மத்​திய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்​பான புதிய வழி​காட்​டு​தல்​களை மத்​திய சட்​டத்​துறை வெளி​யிட்​டுள்​ளது.
 

உச்ச நீதி​மன்​றம், உயர் நீதி​மன்​றங்​கள், மாவட்ட நீதி​மன்​றங்​கள், துணை நீதி​மன்​றங்​கள், தீர்ப்​பா​யங்​கள், குறைதீர் மன்​றங்​களுக்கு மத்​திய அரசு சார்​பில் வழக்​கு​களை நடத்த தனி வழக்​கறிஞர்​கள் நியமிக்​கப்​படு​வது வழக்​கம்.

இவர்​களது பதவிக் காலம் 3 ஆண்​டு​கள் ஆகும். தற்​போது நீதி​மன்​றங்​களில் மத்​திய அரசு வழக்​கறிஞர்​களாக இருப்​பவர்​களின் பதவிக் காலம் இன்​னும் ஓராண்டு உள்​ளது.

இந்​நிலை​யில், மத்​திய அரசு வழக்​கறிஞர்​கள் நியமனத்​துக்​கான புதிய வழி​காட்​டு​தல்​களை மத்​திய சட்​டத்​துறை வெளி​யிட்​டுள்​ளது.

அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: மத்​திய அரசு வழக்​கறிஞர் பதவிக்கு விண்​ணப்​பிப்​பவர்​கள் இந்​திய பார் கவுன்​சிலால் அங்​கீகரிக்​கப்​பட்ட சட்​டப் பல்​கலைக்​கழகம் அல்​லது சட்​டக் கல்​லூரி​யில் இளங்​கலைப் பட்​டம் பெற்​றிருக்க வேண்​டும்.

1961-ம் ஆண்டு வழக்​கறிஞர்​கள் சட்​டத்​தின்​படி மாநில பார் கவுன்​சிலில் பதிவு செய்​திருக்க வேண்​டும். அகில இந்​திய வழக்​கறிஞர்​கள் தேர்​வில் தேர்ச்சி பெற்று பயிற்சி சான்​றிதழ் பெற்​றிருக்க வேண்​டும்.

விண்​ணப்​பிப்​பவர்​களின் சட்​டப் பயிற்சி அனுபவத்தை கருத்​தில் கொண்டு மத்​திய அரசு வழக்​கறிஞர்​கள் குழு​வில் சேர்க்க பரிசீலிக்​கப்​படு​வார்கள்.

அவர்கள் கையாண்ட வழக்​கு​களின் தன்​மை, அதிக முக்​கி​யத்​து​வம் வாய்ந்த வழக்​கு​களை கையாண்​ட​தில் வழக்​கறிஞரின் திறன் ஆகியவை கருத்​தில் கொள்​ளப்​படும்.

வரு​மான வரி, சுங்​கம், ஜிஎஸ்​டி, பிஎம்​எல்ஏ போன்ற சிறப்பு சட்​டங்​களில் அனுபவம் உள்ள வழக்​கறிஞர்​கள், நீதி​மன்​றங்​கள், தீர்ப்​பா​யங்​கள் மற்​றும் நீதித்​துறை சார்ந்த மன்​றங்​களில் மத்​திய அரசின் சிறப்​புக் குழுக்​களுக்கு பரிசீலிக்​கப்​படு​வார்கள்.

10 ஆண்​டு சட்​டப் பணி முன் அனுபவம் உள்ள வழக்​கறிஞர்​கள் அவர்​களின் சட்​டத்​திறன் அடிப்​படை​யில் வழக்​கறிஞர்​கள் குழு​வில் சேர்க்க பரிசீலிக்​கப்​படு​வார்கள்.

இதற்கான செயல்​முறை​யின்​போது ஒரு வழக்​கறிஞரின் ஒட்​டு மொத்த செயல்​திறன் பதிவு, நடத்தை, நேர்மை ஆகியவை கருத்​தில் கொள்​ளப்​படும்.

விண்​ணப்​பங்​களில் உள்ள தகவல்​கள், ஆவணங்​களின் உண்​மைத்​தன்மை அதி​காரி​களால் சரி​பார்க்​கப்​படும். விண்​ணப்​ப​தா​ரர் எந்த குற்ற வழக்​கு​களி​லும் தண்​டிக்​கப்​பட​வில்லை. பார் கவுன்​சில் அல்​லது தகு​தி​யான அதி​காரி​களால் வழக்​கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்​கப்​பட​வில்லை என் ​பதை தெரிவிக்க வேண்​டும்.

மத்​திய அரசின் நலன்​களுக்கு பாதிப்பை ஏற்​படுத்​தும் வகை​யில் வழக்​கறிஞர் பதவியை பயன்​படுத்​தி​யிருந்​தால், சம்​பந்​தப்​பட்​ட​வரின் விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​படும். வழக்​கறிஞர்​களின் செயல்​திறன் ஆண்​டு​தோறும் மதிப்​பாய்வு செய்​யப்​படும்.

நீதி​மன்ற அவம​திப்​பு, தொழில்​முறை ஒழுங்​கீனம் அல்​லது நீதி​மன்​றத்​தால் தண்​டனை பெறு​தல் ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் மத்​திய அரசால் எந்த நேரத்​தி​லும் வழக்​கறிஞர்​கள் பட்​டியலில் இருந்து நீக்​கப்​படலாம்.

மத்​திய அரசு வழக்​கறிஞர் குழு​வில் தேர்வு செய்​யப்​படு​பவர் அமைச்​சகம்​/துறை/நிறு​வனம் தொடர்​பான தகவல்​களின் ரகசி​யத்​தன்​மையை பாது​காக்க வேண்​டும். இந்த வழி​காட்​டு​தல்​கள் உடனடி​யாக அமலுக்கு வரு​கிறது. இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive