Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.08.26

 




திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:48.வலியறிதல்

குறள் எண்:479

குறள்:

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

பொருள்:

தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

பழமொழி :

Misfortunes never come single.

பட்ட காலிலே படும் , கெட்ட குடியே கெடும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. 1. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப்படுத்தும் எந்தக் காரியத்தையும் நான் செய்ய மாட்டேன். 

 2. பேச்சு ஒழுக்கம்: சூழ்நிலைக்கேற்றவாறு சிந்தித்து அளவான வார்த்தைகளைப் பேசுவேன். தகாத வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன். பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன். 

பொன்மொழி : 

நல்ல வார்த்தைகள் ஒரு விதை போன்றவை; அவை ஒருநாள் நிச்சயம் நல்ல கனியைத் தரும்.” 🌱

Thought for the Day :

Do good with pure intentions it will come back to you in an unexpected way

பொது அறிவு : 

1.சட்டமன்ற உறுப்பினராக வயது வரம்பு எது?

 25 வயது

 2. இந்தியாவில் யாரை கைது செய்ய முடியாது?

குடியரசு தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள்.

English words :

1.Sincere – Genuine and honest in feelings or actions, நேர்மையான.

2.Punctual – Always on time, சரியான நேரத்தில் வருபவர்.

புவியியலும் சுற்றுசூழலும் :

இலட்சத்தீவுகள்
அரபிக்கடலில் அமைந்துள்ளன.
இந்தியாவின் மேற்குப் பகுதியில், கேரளக் கடற்கரைக்கு அருகில் உள்ளன.
கவரத்தி இதன் தலைநகரமாகும்.
இதுவும் ஒரு ஒன்றியப் பிரதேசம்.

NMMS :

MAT 

×' என்பதை '-' எனவும், '+' என்பதை '÷' எனவும், '-' என்பதை '+' எனவும், '÷' என்பதை '×' எனவும் குறிப்பிட்டால் 15×16+8-2÷4 ன் மதிப்பைக் காண்க.

 (1) 25.

 (2) 21

 (3) 5

 (4) 20.

 விடை: (2) 21

நீதிக்கதை

வாய்ப்பு கொடுத்தால் திறமை மலரும்:

ஒரு பெரிய நகரத்தில் புகழ்பெற்ற கல்லூரி ஒன்று இருந்தது. அங்கு பல்வேறு திறமைகளைக் கொண்ட மாணவர்கள் படித்து வந்தனர்.

அதே கல்லூரியில் ஆதவன் என்ற மாற்றுத்திறனாளி மாணவனும் படித்து வந்தான். அவன் நடப்பதற்கு சக்கர நாற்காலியை ப் பயன்படுத்தினான். அதனால் சில மாணவர்கள் அவனால் மற்றவர்களைப்போல எல்லா கல்லூரி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியாது என்று நினைத்தனர்.

ஒருநாள் கல்லூரியில் “திறமைத் திருவிழா” நடத்த முடிவு செய்யப்பட்டது.

ஒவ்வொரு மாணவரும் தங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆதவன், “நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு கணினி வடிவமைப்பில் நல்ல ஆர்வமும் திறமையும் இருக்கிறது,” என்றான்.

ஆனால் சில மாணவர்கள், “நீ எப்படி நிகழ்ச்சியில் கலந்து கொள்வாய்?” என்று சந்தேகத்துடன் கேட்டனர்.

அப்போது கல்லூரி ஆசிரியர் ஒருவர், “ஒருவருடைய உடல் நிலையை ப் பார்த்து அவருடைய திறமையை முடிவு செய்யக்கூடாது. வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போம்,” என்றார்.

ஆதவனுக்கு தேவையான வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தனர். அவன் தனது கணினி வடிவமைப்புத் திறமையைப் பயன்படுத்தி, கல்லூரியின் சிறப்புகளை விளக்கும் அழகான டிஜிட்டல் வடிவமைப்பை உருவாக்கினான்.

அதைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அந்த வடிவமைப்பு நிகழ்ச்சியின் சிறந்த படைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆதவன் மகிழ்ச்சியுடன், “எனக்கு மற்றவர்களிடம் இருப்பதைப் போலவே திறமைகள் இருக்கின்றன. எனக்கு தேவைப்பட்டது ஒரு வாய்ப்பு மட்டுமே ,” என்றான்.

அப்போது மாணவர்கள் தங்கள் தவறை உணர்ந்தனர். அதன்பிறகு கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர்களைப் பரிதாபத்துடன் பார்க்காமல், அவர்களின் திறமைகளையும் விருப்பங்களையும் மதித்து, தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கத் தொடங்கினர்.

நீதி:

மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்திறமைகள் உண்டு. அவர்களை குறையாகப் பார்க்காமல், சமமாக மதித்து வாய்ப்பளித்தால், அவர்களின் திறமைகள் உலகிற்கு வெளிப்படும். 

இன்றைய செய்திகள்

24.08.2026

🗒️வீட்டு உபயோக சிலிண்டர் பெற
 E KYC சமர்ப்பித்தலுக்கான காலக்கெடு நீடிப்பு செய்யப்பட்டுள்ளது
  
🗒️இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினை குறித்து 25வது சிறப்பு பிரதிநிதிகள் மாநாடு 25ம் தேதி நடைபெற உள்ளது.அதில் பங்கேற்க  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பீஜிங் செல்ல உள்ளார்.

🗒️இந்திய கடற்படையின் INS சுதர்ஷினி கப்பல் போர்ச்சுகல் நாடு சென்றடைந்தது.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀9.39 விநாடிகளில் 100 மீட்டரை கடந்து உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த ரோபோ
உயரம் தாண்டுதலிலும் ரோபோ ஒன்று புதிய சாதனையை படைத்துள்ளது.

Today's Headlines
 
🗒️ The deadline for submitting e-KYC to get domestic cooking gas cylinders has been extended.

🗒️ The 25th Special Representatives meeting on the India-China border issue will be held on the 25th. National Security Adviser Ajit Doval will travel to Beijing to attend the meeting.

🗒️ The Indian Navy ship INS Sudarshini has reached Portugal.

🏀 Sports News

🏀 A robot ran 100 metres in 9.39 seconds and broke Usain Bolt’s record.

🏀 Another robot has also set a new record in the high jump.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive