சட்டசபையில் பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்புகள்!
பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவர்களுக்கு விளையாட்டு உடை, மாணவர்களுக்கு பல், கண், காது பரிசோதனை, ஸ்மார்ட் நூலக அட்டை உள்ளிட்ட 31 முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் முக்கிய அறிவிப்புகளின் விவரம்:
பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கருத்தியல் புரிதல், பகுப்பாய்வு சிந்தனை மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.18.01 கோடியில் மதிச்சுடர் திட்டம் செயல்படுத்தப்படும்
தமிழக மாணவர்களின் புதுமை மற்றும் தொழில் முனைவுத்திறன் மேம்பாட்டுத் திட்டம். 3,205 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.4.82 கோடியில் செயல்படுத்தப்படும்.
1 முதல் 8-ம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளி மாணவர்கள் திறன்களை மேம்படுத்த 6,980 நடுநிலைப் பள்ளிகளில் சதுரங்கம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் ரூ.20.17 லட்சத்தில் மேம்படுத்தப்படும்.
அரசு, தனியார் மற்றும் பெருநிறுவன மருத்துவமனைகளின் பங்களிப்புடன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல், கண் மற்றும் காது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
1 முதல் 12ம் வகுப்பு வரை 2027-28-ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அறிவு பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்.
மாணவர்களை நாளைய தொழில்நுட்ப முன்னோடிகளாக மாற்ற செயற்கை நுண்ணறிவு எந்திரவியல், புதுமை மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து டிஎன் ஸ்பார்க் திட்டம் செயல்படுத்தப்படும்
கல்வியின் வலுவான அடித்தளத்தை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அளிக்க, 414 பள்ளிகளில் ஆயத்தப் பயிற்சி மையங்களில் உள்ள 9731 குழந்தைகளுக்கு நவீன கற்றல், பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் மகிழ்வான கற்றல் சூழலை உருவாக்க 37,417 பள்ளிகளுக்கு ரூ.187.29 கோடி ஒருங்கிணைந்த பள்ளி மானியம் வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உலகத்தர கற்பித்தலுக்குத் தேவையான அறிவு, திறன் மற்றும் தலைமைத்துவத்தை வழங்க ரூ.11.30 கோடியில் டிஎன் - லீட்ஸ் திட்டம் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.
பொது நூலகங்கள் முழுமையான மின்னுறு அறிவு மையங்களாக மாற்றப்படுவதுடன், ஸ்மார்ட் நூலக அட்டை வழங்கப்படும்.
சென்னை புத்தக கண்காட்சிக்கான அரசு மானியம் ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தி ஆண்டுதோறும் பபாசி அமைப்புக்கு வழங்கப்படும்.
2 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் அறிவுத்திறன்களை உறுதிப்படுத்தும் நோக்கில் 10.5 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் திறன் பிளஸ் திட்டம் ரூபாய் 12.05 கோடி நிதி ஒதுக்கீட்டில் விரிவாக்கம் செய்யப்படும்.
ஒவ்வொரு மாணவருக்கும் தனித்துவமான கற்றலை வலுப்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தமிழ்நாடு தன்னிலை கற்றல் திட்டம் முதற்கட்டமாக 500 அரசு நடுநிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூபாய் 70 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்
வெற்றிக்கான வாய்ப்புகள் பள்ளிக்கு வரட்டும் என்ற நோக்கில், 172 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேசிய அளவிலான உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் வகையில் வெற்றி பாதை திட்டம் ரூபாய் 22.36 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படும்.
1,799 அரசு உயர் மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் திறன்மிகு அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூபாய் 21.84 கோடி நிதி ஒதுக்கீட்டில் உபகரணங்கள் வழங்கப்படும்
படைப்பாற்றல், தலைமைத்துவம், தனித் திறமைகள் மற்றும் கற்றல் ஆர்வம் மலர புத்தகமில்லா கல்வியாக ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டம் 6,279 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூபாய் 1.89 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தப்படும்
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான புதிய திறன் சார்ந்த தமிழ் இலக்கியப் போட்டிகள் 13,259 பள்ளிகளில் அறிமுக படுத்தப்படும்.
50 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை விளையாட்டு திறனை மேம்படுத்தும் சிறப்பு பள்ளிகளாக உருவாக்க ரூபாய் 2.34 கோடியில் ஸ்போர்ட்ஸ் பிளஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.
உயர் கல்வி வாய்ப்புகள், உதவித்தொகைகள் மற்றும் தொழில் வாய்ப்பு வழிகாட்டுதல்கள் குறித்த முழுமையான தகவல்களை ஒருங்கிணைத்து அளிக்க செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உயர்கல்வி வழிகாட்டி செயலி ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்
மாணவர்களின் மன நலனை பேணுவதை உறுதி செய்யும் பொருட்டு மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் உணர்வு நல ஆலோசனை சேவைகள் வழங்கிட துணை எனும் திட்டம் ரூபாய் 27.43 கோடி நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்படும்.
சர்வதேச பல்கலைக்கழகங்களின் வாயிலாக ஆசிரியர்களுக்கான பன்னாட்டு தொழில்முறை மேம்பாடு சார்ந்த படிப்புகளை பெறுவதற்கு ஆண்டுக்கு ரூபாய் 1.8 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆசிரியர்களுக்கான பன்னாட்டு சிறப்பு திறன் மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
அரசு கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.30,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்வு.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.30,000 ஆக உயர்வு.
அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி அறிமுகம்; மாதம் ஒருநாள் ‘புத்தகப் பை இல்லாத நாள்' கடைப்பிடிக்கப்படும்.
2 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களின் திறன்களை உறுதி செய்ய 10.5 லட்சம் மாணவர்களுக்கு 'திறன் ப்ளஸ்' திட்டம் செயல்படுத்தப்படும்.
மாணவர்களின் தனித்துவமான கற்றலை வலுப்படுத்த ‘தன்னிலை கற்றல் திட்டம்' செயல்படுத்தப்படும்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...