Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் வசதி குறைவால் மாணவர் சேர்க்கை சரிவு: நிதியை அதிகரிக்க அன்புமணி கோரிக்கை

hindutamil-prod%2F2026-07-31%2F82b5g6ge%2Fimage-9 
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழக பட்ஜெட்டில், ஒட்டுமொத்த கல்வித்துறைக்கும் ஒதுக்கப்படும் நிதியின் அளவு கடந்த 25 ஆண்டுகளில் 3-ல் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளது. அரசின் தேவையற்ற செலவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்

படும் நிலையில், கல்வித்துறைக்கான நிதி தொடர்ந்து குறைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

ஓர் அரசோ, சமூகமோ அதன் முதல் கடமை குழந்தைகளுக்கு தரமான, இலவசக் கல்வியை வழங்குவதுதான். அதற்காகத்தான் காமராஜர் காலத்தில் அதிகஎண்ணிக்கையில் அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. அவற்றுக்கு அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். அதற்கேற்ற வகையில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால், காலப்போக்கில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டதன் மூலமாக, அரசாங்கப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களும், அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை ஏற்பட்டது. அதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் வேகமாகக் குறைந்து வருகிறது.

தனியார் பள்ளிகள் வளர்ச்சி... அரசு பள்ளிகளின் வீழ்ச்சியால்தான் தனியார் பள்ளிகள் வளருகின்றன. இதனால், தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்

காகவே அரசு பள்ளிகளின் வீழ்ச்சி உருவாக்கப்படுகிறதோ, அதற்காகத்தான் கல்விக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.

அரசுப் பள்ளிகள்தான் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கான கருவிகள். அவற்றை வீழ விடாமல், வளர்த்தெடுக்க வேண்டும். எனவே கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவை மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் குறைந்தது 3 சதவீதம் என்ற அளவுக்காவது அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive