2004 முதல் நடைமுறையிலிருக்கும் என்பிஸ் திட்டத்திற்கு மாற்றாக, மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. மத்திய அரசு ஊழியர்கள் NPS எனப்படும் திட்டத்தில் தொடரலாம் அல்லது இந்த புதிய யுபிஎஸ் திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என்றே மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் பழைய ஓய்வூதியம் திட்டத்தை பற்றி ஒருநாளும் மத்திய அரசு பேசியதே இல்லை.
ஏனெனில் பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பைசா கூட பிடிக்கப்படாது. அரசு என்பிஎஸ் திட்டத்தை பொறுத்தவரை ஊழியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடிக்கப்படுகிறது. பழைய ஓய்வூதியத்தை பொறுத்தவரை முழு செலவையும் மத்திய அரசு தான் ஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் என்பிஎஸ் திட்டத்தில் 14 சதவீதம் தொகையை மட்டுமே மத்திய அரசு வழங்கி வருகிறது. அதேபோல் ஓய்வூதிய தொகை என்பது கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50% உறுதியாக கிடைக்கும். ஒரு லட்சம் சம்பளம் வாங்கியிருந்தால் மாதம் 50 ஆயிரம் ஓய்வூதியம் சாகும் வரை கிடைக்கும். ஆனால் என்பிஎஸ் திட்டத்தை பொறுத்தவரை பங்குச்சந்தை முதலீட்டின் லாபத்தைப் பொறுத்தே ஓய்வூதியம் இருக்கும். இது கூடலாம்.. அல்லது குறையலாம்.. எதுவும் மத்திய அரசின் கைகளில் கிடையாது.
இந்த சூழலில் கடந்த 2004ம் ஆண்டு முதலில் அமலில் இருக்கும் என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு ஓபிஎஸ் எனப்படும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படுமா என்று எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS-) மீண்டும் கொண்டுவரும் யோசனை மத்திய அரசிடம் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினால் அரசுக்குக் கடுமையான நிதிச் சுமை ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் UPS) முக்கிய அம்சங்கள்
நீங்கள் அரசு ஊழியர் என்றால் குறைந்தது 25 ஆண்டுகள் சேவை முடித்த பின்னர், பணி ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் வாங்கிய சராசரி அடிப்படைச் சம்பளத்தில் 50% தொகை உறுதியான ஓய்வூதியமாக வழங்கப்படும். அதேநேரம் நீங்கள் 10 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகளுக்குள் பணியாற்றி ஊழியர்கள் என்றால் சேவை புரிந்த காலத்திற்கு ஏற்பக் குறைந்தபட்ச அளவு விகிதாச்சாரப் அடிப்படையில் ஓய்வூதியம் தருவார்கள்.தெளிவாக சொல்வது என்றால், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ₹10,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
அதேபோல் ஓய்வூதியம் பெற்றுவந்த ஊழியர் உயிரிழந்தால், அவர் கடைசியாகப் பெற்றுவந்த ஓய்வூதியத் தொகையில் 60% தொகை அவரது குடும்பத்திற்கு (மனைவி/கணவருக்கு) ஓய்வூதியமாக கிடைக்கும். விலைவாசி உயர்வைச் சமாளிக்கும் வகையில் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அதேபோல் பணி ஓய்வின் போது வழக்கமாக வழங்கப்படும் கிராஜிவிட்டியுடன் சேர்த்து, கூடுதல் ரொக்கத் தொகையும் வழங்கப்படும்.
அதேபோல் அரசு ஊழியரின் ஒவ்வொரு 6 மாத பணிக்காலத்திற்கும், அவரது சம்பளம் + அகவிலைப்படியில் 10 சதவீதம் கணக்கிடப்பட்டு இந்த மொத்தத் தொகை ஓய்வு பெறும்போது வழங்கப்படுகிறது. பங்களிப்பை பொறுத்தவரை ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் இருந்து 10% பங்களிப்பை தொடர்ந்து வழங்க வேண்டும். ஆனால் அரசு மற்றும் சற்றே அதிகரித்துள்ளது. அதாவது 14%-ல் இருந்து 18.5% ஆக உயர்த்தி உள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...