Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.08.2026

விக்ரம் சாராபாய்





திருக்குறள்: 

 பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:47 தெரிந்து செயல் வகை

குறள் எண்:470

குறள்:

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.  

பொருள்:

தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
 
பழமொழி :

Live with in your means.

வரவுக் கேற்ற செலவு செய்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. இருளால் இருளை நீக்க முடியாது. ஒளி மட்டுமே அதை செய்யும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது. அன்பால் மட்டுமே அதை செய்ய முடியும் .

 2. பெரியோர் தனது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள். எனவே பெரியோரது அனுபவத்தை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

மழையை நேசிப்பவன் இயற்கையை நேசிப்பவன்.

Thought for the Day :

Where rain falls, life flourishes.

பொது அறிவு : 

1. தந்தை பெரியாரின் இயர்பெயர் என்ன?

 ஈ. வெ.ராமசாமி. 

2. பெரியாரை "தந்தை பெரியார் " என்றழைத்தவர் யார்? 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

English words :

Disciplined – Follows rules and routines, ஒழுக்கமானவர்.


Resourceful – Finds smart solutions, திறமையாக தீர்வு காண்பவர்

புவியியலும் சுற்றுசூழலும் :

இந்தியாவிற்கு சொந்தமான இரண்டு முக்கிய தீவுக்கூட்டங்கள்:

1. அந்தமான்–நிக்கோபார் தீவுகள் – வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளன.

2. இலட்சத்தீவுகள் – அரபிக்கடலில் அமைந்துள்ளன.

NMMS :

MAT 

ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில் 'TOMB' என்பதை '3568' மற்றும் 'GOAL' என்பதை '1572' என குறிப்பிட்டால் 'BOAT' என்பதை எவ்வாறு குறிப்பர்? 

 (1) 8357. 

 (2) 8573. 

 (3) 5378.

 (4) 3758. 

 விடை: (2) 8573

ஆகஸ்ட் 12

விக்ரம் சாராபாய் அவர்களின் பிறந்தநாள்


விக்ரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919டிசம்பர் 30, 1971)என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமாக இருந்தார். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.

உலக யானைகள் நாள்



உலக யானைகள் நாள் (World Elephant Day) ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 12 ல் கொண்டாடப்படுகிறது.இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகளை பாதுகாப்பதே ஆகும். இன்றைக்கு உலகத்தில் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்த தினத்தில் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதும் ஒரு நோக்கமாகும்.முதன் முதலில் இந்த தினம் 2012 ஆக.,12ல் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது.


தேசிய நூலக தினம். 



ஆகஸ்ட் 12 - இன்று தேசிய நூலக தினம். சிறப்பு மிக்க இந்த நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணமானவர், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன்.  இந்திய நூலகத்துறைக்கு ஆர்.ரங்கநாதன் வழங்கிய அற்புதம்தான், 'கோலன் பகுப்புமுறை.' நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையே 'கோலன் பகுப்புமுறை' எனப்படுகிறது. இந்தப் பகுப்பு முறை இவரால் ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்டதாகும். இது நூலகத்துறையைச் சார்ந்த பல மேல்நாட்டு அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்களும் இந்த கோலன் பகுப்புமுறையைத்தான் பயன்படுத்துகின்றன. நூலகவியலுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 1957-ம் ஆண்டு, இவருக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது. இவரது பிறந்த தினத்தைத்தான் 'தேசிய நூலக தின'மாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நாளில் சிறந்த நூலகர்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. 'இந்திய நூலகத் தந்தை' என்று போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனை, இந்த நாளில் நினைவுகூர்வோம்

நீதிக்கதை

 பெரியவர்களின் பலம்

ஒரு சிறிய கிராமத்தில் ஹரிஹரன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு எப்போதும் தன்னுடை ய வயதுதான் பெரிய பலம் என்ற எண்ணம் இருந்தது.

ஒருநாள் பள்ளியில் ஆசிரியர், “வயதானவர்களிடம் இருக்கும் அனுபவமும் அறிவும் அவர்களுடைய மிகப்பெரிய பலம்” என்று கூறினார்.

அதைக் கேட்டஹரிஹரன் சிரித்துக்கொண்டே , “நாங்கள் இளையவர்கள். எங்களிடம் அதிக உடல் சக்தி இருக்கிறது. பெரியவர்களால் எங்களைப்போல வேகமாக ஓடவோ, வேலை செய்யவோ முடியாது!” என்றான்.

அன்று மாலை ஹரிஹரனும் அவனுடைய நண்பர்களும் காட்டுப்பாதையில் விளையாடச் சென்றனர். சிறிது நேரத்தில் மழை பெய்து, பாதை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. அவர்கள் எந்த வழியில் வீடு திரும்புவது என்று தெரியாமல் குழம்பினர்.

அப்போது அருகில் இருந்த ஒரு வயதான தாத்தா அவர்களைப் பார்த்தார்.

“இந்தப் பாதையில் செல்லாதீர்கள். மழைக்காலத்தில் அந்த வழியில் தண்ணீர் அதிகமாக வரும். என்னுடன் வாருங்கள்; பாதுகாப்பான பாதை எனக்குத் தெரியும்,” என்றார். ஹரிஹரனும் நண்பர்களும் தாத்தாவுடன் சென்றனர். தாத்தா பல ஆண்டுகளாக அந்தப் பகுதியை அறிந்தவர் என்பதால், எந்த இடம் ஆபத்தானது, எந்தப் பாதை பாதுகாப்பானது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்.

சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்பினர். ஹரிஹரன் தாத்தாவிடம், “தாத்தா, உங்களிடம் இளையவர்களைப் போல உடல் பலம் இல்லாவிட்டாலும், உங்களுடைய அனுபவமும் அறிவும் எங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது என்பதை இன்று புரிந்துகொண்டேன்,” என்றான்.

தாத்தா சிரித்தபடி, “ஒவ்வொரு வயதிற்கும் ஒரு தனிப்பட்ட பலம் உண்டு. இளையவர்களிடம் வேகமும் உற்சாகமும் இருக்கும்; வயதானவர்களிடம் அனுபவமும் பொறுமையும் இருக்கும். இரண்டும் இணைந்தால் எந்தச் சிரமத்தையும் சமாளிக்க முடியும்,” என்றார்.

🌟 நீதி:

இளையவர்களின் சக்தியையும், வயதானவர்களின் அனுபவத்தையும் மதித்து ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இன்றைய செய்திகள்

12.08.2026

🗒️பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் என்.ஆனந்த் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

🗒️தமிழகத்துக்கு தினமும் ஒரு டிம்சி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

🗒️மியான்மர் முன்னாள் பெண் தலைவர் ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை நிராகரித்தது மியான்மர் அரசு.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀 உலக ஜூனியர் தடகளம்:
ஆஸ்திரேலிய வீராங்கனை இசோபெல் லூயிசன் ரோ  தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

Today's Headlines

🗒️ A review meeting was held under the leadership of Minister N. Anand about monsoon preparedness measures.

🗒️ The Cauvery Water Regulation Committee has recommended releasing one TMC of water every day to Tamil Nadu.

🗒️ The Myanmar government rejected the request to release former woman leader Aung San Suu Kyi.

🏀 Sports News

🗒️ World Junior Athletics:
Australian athlete Isobel Louison Rowe won the gold medal.

Covai women ICT_போதிமரம்

 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive