மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும்
மறுமதிப்பீடு முடிவு உட்பட) மதிப்பெண் சான்றிதழ்கள் 12.08.2026 (புதன்
கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள் தாங்கள்
பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு
மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும்,
விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
நேரடி தனித்தேர்வர்கள் (Direct-Private Candidates) தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது சமர்ப்பித்த அசல் மாற்றுசான்றிதழ்களை அவரவர் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...