![]() |
| நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் |
இயல் : அரசியல்
அதிகாரம்:48.வலியறிதல்
குறள் எண்:475
குறள்:
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
பொருள்:
மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.
Many a slip between the cup and the lip.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.
2.கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன் .
பொன்மொழி :
இன்றைய இளைஞரின் திறமைதான் நாளைய நாட்டின் வலிமை.
Thought for the Day :
Youth with skills, nation with strength.
பொது அறிவு :
1. அரசியின் மணிமுடி என்று அழைக்கப் படுவது எது?
தாஜ்மஹால்
2. திராவிட ஒப்பிலக்கணத்தின் தந்தை யார்?
திரு. கால்டுவெல்
English words :
1. Meticulous – Very careful and precise, மிகுந்த கவனமான.
2. Compassionate – Caring and kind, இரக்கமுள்ள.
புவியியலும் சுற்றுசூழலும் :
இங்கு அடர்ந்த வெப்பமண்டலக் காடுகள் காணப்படுகின்றன.
பல்வேறு அரிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் இங்கு வாழ்கின்றன.
செல்லுலார் சிறை (Cellular Jail) போர்ட் பிளேரில் அமைந்துள்ளது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதற்கு முக்கியத்துவம் உண்டு.
NMMS :
SAT - SOCIAL
பாண்டியர்களின் துறைமுகங்களில் மிகவும் விறுவிறுப்பாக வணிகம் நடைபெற்ற துறைமுகம் எது?
(1) காயல்பட்டினம்
(2) கொற்கை
(3) காவிரிப்பூம்ட்டினம்
(4) உறையூர்
விடை: (1) காயல்பட்டினம்
ஆகஸ்ட் 18
- நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
- 1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
- செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ்.
- விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
நீதிக்கதை
பங்கிட்டுத் தின்றால் பசியாறும்
ஒரு சிறிய கிராமத்தில் உதய் என்ற சிறுவன் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது, அவனுடைய நண்பன் நியாஸ் மிகவும் சோர்வாக இருப்பதைப் பார்த்தான்.
“என்ன நியாஸ்? ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாய்?” என்று உதய் கேட்டான்.
“இன்று காலை வீட்டில் இருந்து அவசரமாக வந்துவிட்டேன். உணவு சாப்பிடவில்லை . இப்போது மிகவும் பசிக்கிறது,” என்றான் நியாஸ்.
உதயிடம் அம்மா கொடுத்திருந்த இரண்டு இட்லிகளும் ஒரு வாழைப்பழமும் இருந்தன. முதலில் அவனுக்கும் பசி இருந்தது. இருந்தாலும், நண்பனின்நிலையை ப் பார்த்ததும் தனது உணவை இருவரும் சமமாகப் பகிர்ந்துக் கொண்டான்.
இருவரும் அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து உணவைப் பகிர்ந்து சாப்பிட்டனர். “உதய், உனக்கும் பசி இருந்திருக்கும் அல்லவா? உன் உணவை என்னுடன் ஏன் பகிர்ந்து கொண்டாய்?” என்று நியாஸ் கேட்டான்.
உதய் சிரித்துக்கொண்டே , “நாம் மட்டும் சாப்பிட்டால் வயிறு நிறையும். ஆனால், இருவரும் பகிர்ந்து சாப்பிட்டால் மனமும் நிறையும்!” என்றான்.
அப்போது அந்த வழியாகச் சென்ற ஆசிரியர் அவர்களின் செயலைக் கவனித்தார்.
“குழந்தைகளே , உணவைப் பகிர்ந்து கொள்வது சிறிய செயல் போலத் தோன்றலாம். ஆனால் அது அன்பையும் நட்பையும் வளர்க்கும் பெரிய பண்பு,” என்று பாராட்டினார்.
அன்றிலிருந்து உதயும் நியாஸும் மட்டுமல்லாமல், அவர்களுடைய வகுப்பு மாணவர்களும் தங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.
நீதி:
நம்மிடம் இருப்பதைப் பிறருடன் பகிர்ந்து கொண்டால், உணவு மட்டுமல்ல—அன்பும் மகிழ்ச்சியும் பெருகும். “பங்கிட்டுத் தின்றால் பசியாறும்; பகிர்ந்து வாழ்ந்தால் மனம் நிறையும்.”
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...