OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

TET - தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் கவனத்திற்கு - சுணக்கம் வேண்டாம்!!

 மதிப்பிற்குரிய இயக்குநர் அவர்களின் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ளவாறு 
உச்சநீதிமன்றத்தின் ஆணையைச் செயலாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது
 
எனவே இந்நேர்வின் அவசியத்தையும், அவசரத்தையும் TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் உணர வேண்டியது இன்றியமையாதது. 

தேர்ச்சிக்கான மதிப்பெண் குறைக்கப்படுமா? பணியாற்றிய காலத்திற்காகக் கருணை மதிப்பெண் வழங்கப்படுமா? சங்கங்கள் முயன்று விலக்கினைப் பெற்றுத்தருமா? தேர்வே வேண்டாமென்று உச்ச நீதிமன்றம் கூறிவிடுமா? 
என்றவாறு எல்லாம் இலவு காத்த கிளியென இருக்காமல் இருக்கும் காலத்தைப் பொறுப்புடன் பயன்படுத்தி டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிறப்புத் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது ஒன்றே உகந்த செயலாகும். 

சலுகைகளோ, கருணைகளோ வரும்போது வரட்டும். அவ்வாறு வரும்போது அவற்றின் மூலம் கிடைக்கும் பலனை அனுபவித்துக் கொள்ளலாம். ஆனால் ஒருவேளை அவ்வாறு எதுவும் கிடைக்காமல் போய்விட்டால் அதன் பிறகு அழுது புலம்பி ஆவதென்ன? 
 
எனவே இன்னும் TET தேர்ச்சி பெறாத ஆசிரியத் தோழர்கள் தேர்வு முடியும்வரை வேறெந்த தகவலுக்காகவும் காத்துக் கொண்டு இருக்காமல் - வாட்ஸ்அப்பில் ஏதேனும் நல்ல சேதி வருமா என்று பார்த்துக் கொண்டு இருக்காமல் படிக்கத் தொடங்குங்கள். 

மற்றவர்கள் மீது நம்பிக்கை வைப்பதை விட்டு விட்டு உங்கள் மீதே நீங்கள் நம்பிக்கை வையுங்கள். எனக்கான தகுதி நிலையை நானே முயன்று அடைந்து விடுவேன் என்று உறுதி பூணுங்கள். அதற்காக தொடர்ந்து முயன்று பாடுபடுங்கள். 



அறத்திற்குப் பொருந்தாத வகையில் நம் மீது திணிக்கப்பட்ட இந்தக் கொடுமையில் இருந்து வெளியே வர வேண்டுமென்றால் தேர்ச்சி பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இப்போது புலம்பிக் கொண்டு காலத்தைக் கடத்துவதால் எந்தப் பயனுமில்லை. 
 
அடுத்த தேர்வு எப்போது வருமென்று யாருக்குத் தெரியும்? அதுவுமன்றி பாடநூல்கள் மாறிவிட்டால் அடுத்தடுத்து வருகின்ற தேர்வுகள் இன்னும் கடினமானதாக இருக்கும். 

எனவே முழுமையான நம்பிக்கையுடன் இந்தத் தேர்வினையே எதிர்கொண்டு வென்று முடிப்பேன் என்று உறுதி கொள்ளுங்கள். தேர்வு முடியும்வரை மற்ற எந்த சலனத்திற்கும் இடங்கொடாதீர். அனைத்து தொல்லைகளும் 2026 ஆம் ஆண்டுடன் முடியட்டும் என்று முயலுங்கள். 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive