Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET தேர்வு வழக்கு நிலுவையில் இருப்பதால் 4 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் ஆசிரியர்கள் பரிதவிப்பு

1436174

டெட் தேர்வு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் கடந்த 4 ஆண்டுகளாக ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கலந்தாய்வின் மூலம் பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

இதனிடையே, ஏற்கெனவே பணியில் உள்ள 55 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒருவர், நீதிமன்றத்தை நாடினார்.

அந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் கடந்த 4 ஆண்டுகளாக கலந்தாய்வின் மூலம் பணியிட மாறுதல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

இதனிடையே, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்பட்ட நிலையில், உயர்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள் கடந்த 4 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.

கடந்த 4 ஆண்டுகளாக பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறாததால், ஆசிரியர்கள் பலரும் பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர்.

மேலும், பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பதவி உயர்வின்றி கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் 27 உயர் நிலைப் பள்ளிகள், 50-க்கும் அதிகமான நடுநிலைப் பள்ளிகள், 100-க்கும் அதிகமான தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

எனவே, நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்து தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ஆ.மலைக் கொழுந்தன் தெரிவித்தது: 2022-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை.


பல அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாதது, மாணவர்கள் எண்ணிக்கை குறைய காரணமாக உள்ளது. இதுதொடர்பான வழக்குகளை விரைந்து முடித்து பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தி தலைமை ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive