Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

8th Pay Commission - அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2026 முதல் அரியர்- எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

 
8வது ஊதியக் குழு பரிந்துரைகளின் படி, சம்பள உயர்வுக்கான அரியர் தொகையின் அளவு மற்றும் அதைப் பெறுவதற்கான தகுதி ஆகியவை, 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு வெளியிடப்போகும் இறுதி அறிவிப்பைப் பொறுத்தே அமையும்.
 
8வது ஊதியக் குழு பரிந்துரைகளின் அமலாக்கத்திற்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்த பரிந்துரைகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து அரசாங்கம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே இது குறித்த தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது.

சம்பள உயர்வுடன் அரியர் தொகை
8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தவுடன் சம்பளம் உயரும் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும், இதில் அதிகம் பேசப்படாத ஒரு விஷயமும் உள்ளது. அதுதான் சம்பள உயர்வுக்கான அரியர் தொகை. புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் எவ்வளவு தாமதமாக அமல்படுத்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு அரியர் தொகையும் அதிகமாக இருக்கும்.

8வது ஊதியக் குழு அரியர் தொகை
 
ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அதற்காக நிர்ணயிக்கப்பட்ட குறிப்புத் தேதியான 2026 ஜனவரி 1-ம் தேதியிலிருந்து முன் தேதியிட்டு (retrospective effect) அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் இந்தத் தேதியிலிருந்தே புதிய ஊதிய அமைப்பைச் செயல்படுத்த முடிவு செய்தால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகைகள் (8th Pay Commission Arrears) கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நிலுவைத் தொகைகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம்.

அரியர் தொகை எப்படி வழங்கப்படும்?
 
8வது ஊதியக் குழு பரிந்துரைகளின் படி, சம்பள உயர்வுக்கான அரியர் தொகையின் அளவு மற்றும் அதைப் பெறுவதற்கான தகுதி ஆகியவை, 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு வெளியிடப்போகும் இறுதி அறிவிப்பைப் பொறுத்தே அமையும். இந்த அறிக்கையின்படி, பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் 12 முதல் 18 மாதங்கள் வரை தாமதம் ஏற்பட்டால், ஊழியர்களுக்கு அவர்களின் திருத்தப்பட்ட ஊதியத்தின் பல மாதங்களுக்கு இணையான நிலுவைத் தொகை கிடைக்கக்கூடும்.
 
ஊதிய நிலை (pay level), ஃபிட்மென்ட் ஃபாக்டர் (fitment factor) மற்றும் படிகளைப் பொறுத்து, இந்தத் தொகை ₹1 லட்சம் அல்லது அதற்கு மேலாக இருக்கலாம். பரிந்துரைகள் எந்தத் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்தே இந்த நிலுவைத் தொகை அமையும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

பொதுவாக, அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய அரியர் தொகையின் அளவு (ஊதியம் மற்றும் ஓய்வூதியம்) பின்வரும் இரண்டு முக்கிய காரணிகளைப் பொறுத்து இருக்கும்:
ஆகையால், நிலுவைத் தொகை பெறுவதற்கான தகுதி, அது நடைமுறைக்கு வரும் தேதி மற்றும் கணக்கீடு குறித்த துல்லியமான தகவல்களைப் பெற, ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மத்திய அரசின் இறுதி அறிவிப்புக்காகக் காத்திருக்க வேண்டும்.

இதுவரை இருந்த நடைமுறை என்ன?
 
முந்தைய ஊதியக் குழுக்களின் அனுபவத்தைப் பார்த்தால், ஊழியர்கள் தங்கள் நிலுவைத் தொகையைப் பெறுவதற்கு வெவ்வேறு கால அளவுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

5வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் 19 மாதங்கள் தாமதம் ஏற்பட்டது. அப்போது நிலுவைத் தொகைகள் 1997–98 மற்றும் 1998–99 ஆகிய ஆண்டுகளில் இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டன.
 
6வது ஊதியக் குழுவின் விஷயத்தில், ஊழியர்கள் 32 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 

7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன. அதனுடன் தொடர்புடைய நிலுவைத் தொகைகள் 2016–17 நிதியாண்டில் வழங்கப்பட்டன. 

8வது ஊதியக் குழு, அது அமைக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. 

இருப்பினும், 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும் சரியான தேதி, அமலாக்க காலவரிசை மற்றும் நிலுவைத் தொகைகளை வழங்கும் முறை குறித்து மத்திய அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

அரியர் எப்படி கணக்கிடப்படுகின்றது?
ஊதிய உயர்வு அரியர் தொகைக்கான சூத்திரம் இதோ:

அரியர் தொகை = மாதாந்திர சம்பள வித்தியாசம் (8வது மற்றும் 7வது ஊதியக் குழுக்களின் அடிப்படை ஊதியங்களுக்கு இடையிலான வித்தியாசம்) x தாமதமான மாதங்களின் எண்ணிக்கை.

அரியர் தொகை எவ்வளவு கிடைக்கும்?
அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக்கூடிய அரியர் தொகையின் அளவை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். 2.57 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் வெவல் 6 ஊழியர்களுக்கான அரியர் தொகை கணக்கீட்டை காணலாம்.

7வது ஊதியக் குழுவின்படி, நிலை 6 (Level 6) ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம்: ரூ.35,400
திருத்தப்பட்ட ஊதியம் (2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர்): ரூ. 90,978
ஊதிய உயர்வு: மாதம் ரூ. 55,578
அரியர் தொகை: ரூ. 11,11,560 (20 மாதங்களுக்கு)




1 Comments:

  1. 2016-2017 க்கான 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive